- மஞ்சுளா தேவி
கோவை: பெங்களூரு டூ கோயம்பத்தூர் இடையே புதிய வந்தே பாரத் விரைவு ரயில் இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளதாக கோவை தெற்குத் தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
சென்னைக்கு அடுத்து, கோவை ஏராளமான தொழிற்சாலைகள் நிறைந்த தொழில் மாநகரம். கோவை மற்றும் பெங்களூர் இடையே வர்த்தக ரீதியான தொடர்புகளும் உள்ளன. அதிக அளவில் இரு நகரங்களுக்கு இடையே போக்குவரத்தும் உள்ளது. இரு நகரங்களுக்கு இடையே உள்ள திருப்பூர், ஈரோடு ,சேலம் ,தர்மபுரி ,கிருஷ்ணகிரி, ஓசூர் போன்ற பகுதிகளில் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளது.
ஏற்கனவே கோவை - பெங்களூர் இடையே உதய் எக்ஸ்பிரஸ் ரயில் ஓடிக் கொண்டிருக்கிறது. இது காலையில் இயக்கப்படும் ரயிலாகும். இது 7 மணி நேர பயணமாகும். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டால் இதை விட குறைந்த நேரத்தில் இரு ஊர்களுக்கும் பயணிக்க முடியும். மேலும் அதிக அளவிலான மக்களும் இதைப் பயன்படுத்த முடியும். இந்தத் தகவலை வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோயம்பத்தூரிலிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு ஏற்கனவே ஒரு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. பெங்களூருக்கு ஒரு ரயில் அறிமுகமானால், அது கோவைக்குக் கிடைக்கும் 2வது வந்தே பாரத் ரயிலாக இருக்கும். மேலும் தமிழ்நாட்டின் 4வது வந்தே பாரத் ரயிலாகவும் அது அமையும். ஏற்கனவே சென்னையிலிருந்து பெங்களூர் வழியாக மைசூருக்கு ஒரு ரயிலும், சென்னையிலிருந்து மதுரை வழியாக திருநெல்வேலிக்கு இன்னொரு ரயிலும் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் டூ கோயம்புத்தூர் இடையே இயக்கப்படும் புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் எப்போது தொடங்கப்படும் என்ற தேதியும், நேரமும் இன்னும் அறிவிக்கவில்லை. இருப்பினும் விரைவில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்வர் ரிவ்யூ கூட்டம் நடத்தவில்லை; Reels தான் எடுத்துள்ளார்! - மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: சாந்தி மற்றும் கணவருக்கு ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு
மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்ட விழாவில் மின்தடை
தென்தமிழ்த் தலையங்கம்: உலகம் இதற்கு முன்பு எதைப் பார்த்தெல்லாம் பயந்திருக்கிறது?
"2027 உலகக் கோப்பையே எனது கடைசி ஆட்டம்" – விராட் கோலி நெகிழ்ச்சி
இத்தாலியில் பள்ளி மாணவிகள் புர்கா அணிய தடை: அமைச்சரவை ஒப்புதல்
சினிமா படப்பிடிப்புக்கான அனுமதியை இனி ஆன்லைனில் பெறலாம்: தமிழக அரசு அறிவிப்பு
அப்பா மாதிரி நாமளும் ஆகணும்!
இரயில் சினேகம்.. ஒரு நிமிடக் கதை (21)
{{comments.comment}}