- தெ.நாராயண லெட்சுமி, B.E
ஹக் அல் லைலா அதாவது Haq Al Laila.. இது அமீரகத்தின் கலாச்சாரப் பெருமை மற்றும் ரமலான் வருகையின் பிரகடனம் என்று சொல்லலாம்.
ஐக்கிய அரபு அமீரகம் போன்ற வளைகுடா நாடுகளில் வசிக்கும் போது, அங்குள்ள மண்ணின் மைந்தர்களின் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் அறிந்து கொள்வது மிகவும் அவசியமானது. அந்த வகையில், மிகவும் அழகான மற்றும் உணர்வுப்பூர்வமான ஒரு பாரம்பரிய விழா தான் இந்த ஹக் அல் லைலா.
ஹக் அல் லைலா என்றால் என்ன?

அரபி மொழியில் இந்த இரவுக்கான உரிமை என்று இதற்கு அர்த்தம். இஸ்லாமிய மாதமான ஷஃபான் மாதத்தின் 15-வது இரவை ஒட்டி இந்த விழா கொண்டாடப்படுகிறது. அதாவது, புனித ரமலான் மாதம் தொடங்குவதற்கு சரியாக 15 நாட்களுக்கு முன்பு இந்த கொண்டாட்டம் நடைபெறும்.
இதில் என்ன சுவாரஸ்யம் தெரியுமா.. இந்த விழா முழுக்க முழுக்க குழந்தைகளை மையப்படுத்திக் கொண்டாடப்படுகிறது. அமீரகத்தில் இதை எவ்வாறு கொண்டாடுகிறார்கள் என்பதை அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்.
விழா நாளன்று மாலை குழந்தைகள் அனைவரும் தங்களின் பாரம்பரிய அரபு உடைகளை (பெண்கள் ஜலபியா மற்றும் ஆண்கள் கண்டூரா) அணிந்து கொள்வார்கள். கைகளில் ஒரு துணிப்பையை ஏந்திக்கொண்டு, தெருக்களில் உள்ள ஒவ்வொரு வீட்டின் கதவையும் தட்டுவார்கள். அப்போது ஹக் அல் லைலாவுக்கான பிரத்யேகப் பாடல்களை உற்சாகமாகப் பாடுவார்கள்.
இப்படி டிசைன் டிசைனாக ஆடை அணிந்து பாட்டுப் பாடி வரும் குட்டீஸ்களை, வரவேற்கும் வீட்டு உரிமையாளர்கள், அவர்களின் பைகளில் இனிப்புகள், சாக்லேட்டுகள் மற்றும் விதவிதமான நட்ஸ் வகைகளை வழங்கி மகிழ்வார்கள்.
இது நம் ஊரில் தீபாவளிக்கு இனிப்புகள் பகிர்ந்து கொள்வது போலவும், நவராத்திரி கொலு சமயத்தில் குழந்தைகள் வீடு வீடாகச் செல்வது போலவுமாகும்.
ஹக் அல் லைலா என்பது வெறும் இனிப்புகளைப் பகிர்ந்து கொள்ளும் நாள் மட்டுமல்ல; இதற்குப் பின்னால் ஆழமான வாழ்வியல் அர்த்தங்கள் உள்ளன. புனித ரமலான் மாதம் வரப்போகிறது, அதற்கு நம் மனதையும் வீட்டையும் தயார்படுத்துங்கள் என்பதை நினைவூட்டும் ஒரு அழகான அறிவிப்பு இது.
அத்தோடு, குழந்தைகளுக்குச் சிறு வயதிலேயே பிறருக்குக் கொடுத்து உதவும் குணத்தையும், ஈகை பண்பையும் கற்றுக்கொடுக்கிறது. சமூக ஒற்றுமை: அக்கம்பக்கத்தினருடன் பழகுவதற்கும், சமூக உறவுகளை வலுப்படுத்துவதற்கும் இது ஒரு பாலமாக அமைகிறது.

இன்றைய நவீன காலத்திலும், அமீரக அரசு இந்தத் தொன்மையான கலாச்சாரத்தை அழியாமல் பாதுகாத்து வருகிறது. பள்ளிகள், அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இது ஒரு மதச்சார்பு கொண்ட நிகழ்வாக மட்டுமின்றி, அரபு நாடுகளின் அடையாளமாகத் திகழ்கிறது.
அமீரகத்தில் வசிக்கும் நமக்கு, இந்த மண்ணின் கலாச்சாரத்தைப் புரிந்துகொண்டு கொண்டாடுவது ஒரு பெருமையான விஷயம். ஹக் அல் லைலா என்பது மகிழ்ச்சி, பகிர்வு மற்றும் புனித ரமலானுக்கான ஆன்மீகத் தயாரிப்பு ஆகிய மூன்றையும் இணைக்கும் ஒரு உன்னதமான பாரம்பரிய விழா.
எங்கிருந்தாலும் அந்த ஊர் கலாச்சாரத்தைக் கொண்டாடுவதும் ஒரு சுகானுபவம்தானே.. கொண்டாடி மகிழ்வோம்!
(தெ. நாராயணலட்சுமி, ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல் கைமாவில் வசித்து வருகிறார்)
உண்மையான மகிழ்ச்சி எது தெரியுமாங்க.. ?
கூந்தலில் அலர்!
ரோட்டுல நடக்கும்போது இதையெல்லாம் இனி மனசுல வச்சிட்டு நடங்க பாஸ்!
பாய்ல்ட் எக் கிரேவி.. தோசைக்கு செம்ம ஜோடி.. கூட 2 சுட்டு சாப்பிடுவீங்க!
2024,2025 ஆண்டுகளில் நமக்கு கோடைக்காலமே வரவில்லையா முக ஸ்டாலின் அவர்களே?:எடப்பாடி பழனிச்சாமி கேள்வி!
விஜய்யின் சேலம் பேச்சு எப்படி இருக்கு?...கூட்டத்தில் இதெல்லாம் கவனிச்சீங்களா?
திமுகவிற்கு தில்லு இருக்கா? திராணி இருக்கா? : தவெக தலைவர் விஜய் பேச்சு!
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்.. அதற்கு சிறந்த ஊடகம் எது தெரியுமா?
லைலா ஓ .. ஹக் அல் லைலா.. கொண்டாடி மகிழ்வோம்.. அமீரக கலாச்சாரத்தை!
{{comments.comment}}