உலகின் மிகவும் இளம் வயது அதிபராகப் போகும் வங்கதேசத்தின் ஷிரின் ஷர்மின் செளத்ரி!

Jan 27, 2023,01:29 PM IST
டாக்கா: வங்கதேசத்தின் அடுத்த அதிபராக அந்த நாட்டு நாடாளுமன்ற பெண் சபாநாயகர் ஷிரின் ஷர்மின் செளத்ரி உருவெடுப்பார் என்று கூறப்படுகிறது. அப்படி அவர் அதிபர் ஆனால், உலகிலேயே மிகவும் இளம் வயது அதிபராகவும் அவர் சாதனை படைப்பார்.



வங்கதேச அதிபராக ஷிரின் ஆனால், அந்த நாட்டின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையையும் வரலாற்றையும் அவர் படைப்பார். தற்போது அந்த நாட்டின் பிரதமராக ஷேக் ஹசீனா உள்ளார். ஷிரின் அதிபரானால், ஒரே நேரத்தில் பிரதமர் மற்றும் அதிபர் இருவரும் பெண்களாக இருக்கும் நாடாகவும் வங்கதேசம் உருவெடுக்கும்.

ஷேக் ஹசீனா 2009ம் ஆண்டு ஆட்சியைப் பிடித்தார். அவரது அமைச்சரவையில் பலரும் பெண்கள்தான். உள்துறை அமைச்சராக சஹாரா கதுன் இருக்கிறார். வெளியுறவுத்துறை அமைச்சராக திபு மோனி உள்ளார். இவர் கல்வி அமைச்சராகவும் செயல்படுகிறார். இவர் இஸ்லாமிய பழமைவாதத்தை எதிர்த்து துணிகரமாக செயல்படக் கூடியவரும் கூட. 

வங்கதேச ஜனாதிபதி தேர்தல் பிப்ரவரி 18ம் தேதி நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ளது.  தற்போது ஜனாதிபதி அப்துல் ஹமீத் விலகியதும் ஜனவரி 23ம் தேதி முதல் பிப்ரவரி 23ம் தேதிக்குள் தேர்தல் நடைபெறும் என்று ஏற்கனவே தேரத்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

ஷிரின் ஷர்மின் பெயரை இன்னும் ஆளும் அவாமி லீக் கட்சி முறைப்படி அறிவிக்கவில்லை. ஆனால் அவரைத்தான் ஆளும் கட்சி வேட்பாளராக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

World Daughters Day: இரவில் நீலாம்பரியாய் தாயாகி தாலாட்டுபவள் அவள்!!

news

சர்வதேச மகள்கள் தினம்.. மகாலட்சுமியின் ரூபமே பெண் குழந்தைகள்!

news

மகள் இல்லாக் குறையைப் போக்க வந்த மருமகள்!

news

தென்தமிழ் தலையங்கம்: சுற்றுலா.. மனிதத்தையும் தேசத்தையும் இணைக்கும் பாலம்!

news

மகாளயபட்சம்.. முன்னோர்களுக்குத் தர்ப்பணம், அன்னதானம் செய்வது சிறப்பு!

news

முதல்வர் ரிவ்யூ கூட்டம் நடத்தவில்லை; Reels தான் எடுத்துள்ளார்! - மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

news

ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: சாந்தி மற்றும் கணவருக்கு ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு

news

மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்ட விழாவில் மின்தடை

news

தென்தமிழ்த் தலையங்கம்: உலகம் இதற்கு முன்பு எதைப் பார்த்தெல்லாம் பயந்திருக்கிறது?

அதிகம் பார்க்கும் செய்திகள்