சிவபெருமானுக்கு உகந்த மகா சிவராத்திரி திருவிழா இந்த ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் வாழ்வில் அனைத்து நன்மைகளும் கிட்டும் என்பது நம்பிக்கை. குறிப்பாக, உங்கள் ராசிக்கு ஏற்ற கோயில்களுக்குச் சென்று வழிபடுவது இன்னும் கூடுதல் பலன்களைத் தரும். 12 ராசிக்காரர்களும் மகா சிவராத்திரி அன்று எந்த சிவன் கோவிலுக்கு சென்று, எப்படி வழிபட்டால் சிவபெருமானின் அருளை முழுமையாக பெற வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
12 ராசிகளுக்கான சிவ வழிபாட்டு முறைகள் :

மேஷம்: நீங்கள் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டும். அங்கு தீபம் ஏற்றி இறைவனை வணங்குவது சிறப்பு. குறிப்பாக, சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வழிபடுவது உங்கள் வாழ்வில் ஒளியேற்றும். மந்திரம்: ஓம் நம சிவாய நம:
ரிஷபம்: நீங்கள் திருவானைக்காவல், கங்கைகொண்ட சோழபுரம், திருவாரூர் அல்லது காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குச் செல்லலாம். சிவன் மற்றும் நந்தி இருவரையும் சேர்த்து அடி பிரதட்சணம் செய்வதுடன், "ஓம் நமசிவாய" என்ற மந்திரத்தை இடைவிடாமல் ஜெபிப்பது மங்களத்தைத் தரும்.மந்திரம்: ஓம் கௌரி சங்கராய நம:
மிதுனம்: சிதம்பரம், திருச்செங்கோடு அல்லது காளஹஸ்தி தலங்களுக்குச் செல்வது சிறப்பு. சிவனுக்கு மோர் அல்லது கரும்புச்சாறு கொண்டு அபிஷேகம் செய்வதும், சிவ ஸ்லோகங்களைப் பாடி வழிபடுவதும் உங்கள் ராசிக்கு உகந்தது.மந்திரம்: ஓம் நம சிவாய நம: (அல்லது) ஓம் நம: சிவாய மகா தேவாய நம:
கடகம்: வேலூர் ஜலகண்டேஸ்வரர், திருவானைக்காவல் அல்லது திருக்கடையூர் தலங்களுக்குச் செல்லலாம். அங்கு நடைபெறும் அபிஷேகத்தைத் தரிசிக்கலாம் அல்லது நீங்களே அபிஷேகம் செய்யலாம். கோயிலுக்குத் தேவையான பால் மற்றும் பூஜை பொருட்களை வாங்கிக்கொடுப்பது புண்ணியம் சேர்க்கும். மந்திரம்: ஓம் சந்திரசேகராய நம:
சிம்மம்: திருவண்ணாமலை அல்லது சிதம்பரம் கோயிலுக்குச் சென்று வழிபடலாம். அண்ணாமலையாரை நினைத்து 5 தீபங்கள் ஏற்றி வணங்குங்கள். பாலில் சிவப்பு சந்தனம் கலந்து சிவனுக்கு அபிஷேகம் செய்வது இரட்டிப்பு பலன் தரும். மந்திரம்: ஓம் நம சிவாய மகா தேவாய நம:
கன்னி: காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் அல்லது மதுரை மீனாட்சி சொக்கநாதர் கோயிலுக்குச் சென்று வழிபடலாம். அருகிலுள்ள சிவாலயத்திற்குச் சென்று அடி பிரதட்சணம் செய்வதும், கோயிலுக்குத் தேவையான பொருட்களைத் தானமாக வழங்குவதும் நல்லது. மந்திரம்: ஓம் நம சிவாய நம:
துலாம்: மதுரை மீனாட்சி சொக்கநாதர், சிதம்பரம் அல்லது காளஹஸ்தி கோயிலுக்குச் செல்லலாம். நீண்ட தூரப் பயணம் மேற்கொண்டு இறைவனைத் தரிசிப்பது உங்கள் ராசிக்கு விசேஷம். தேவாரம் மற்றும் திருவாசகப் பாடல்களைப் பாடி, பால் அபிஷேகம் செய்து வழிபடுங்கள். மந்திரம்: ஓம் நம சிவாய சாந்தாய நம:
விருச்சிகம்: திருவானைக்காவல் அல்லது வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்குச் செல்லலாம். சிவராத்திரி அன்று கோயிலைத் தூய்மைப்படுத்துதல் (உழவாரப்பணி) மற்றும் பக்தர்களுக்கு நீர் வழங்குதல் போன்ற சேவைகளைச் செய்யலாம். வெல்லம் கலந்த நீரை இறைவனுக்கு நைவேத்தியம் செய்வது சிறப்பு. மந்திரம்: ஓம் நம சிவாய நம:
தனுசு: திருப்பரங்குன்றம் சிவன் கோயில் அல்லது திருவண்ணாமலைக்கு செல்லலாம். உங்களால் இயன்ற அளவு நல்லெண்ணெய் வாங்கிக் கொடுத்து, 5 தீபங்கள் ஏற்றி வழிபடுங்கள். மனதிற்குள் பஞ்சாட்சர மந்திரத்தை ஜெபிப்பது மன அமைதி தரும். மந்திரம்: ஓம் நம சிவாய குருவே நம:
மகரம்: காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குச் செல்வது சிறந்தது. கோயிலுக்கு நடந்து சென்று, எவ்வித பலனையும் எதிர்பார்க்காமல் சிவனை வலம் வந்து வழிபடுங்கள். அபிஷேகம் செய்வது மற்றும் பூஜை பொருட்கள் வாங்கிக் கொடுப்பது மேன்மையைத் தரும். மந்திரம்: ஓம் நம சிவாய மகா காலாய நம:
கும்பம்: காளஹஸ்தி அல்லது சிதம்பரம் கோயில்களுக்குச் செல்லலாம். சிவபெருமானின் நாமத்தை மனதிற்குள் ஜெபித்து தியானம் செய்வது சிறந்தது. குறிப்பாக, சிவனுக்கு இளநீர் அபிஷேகம் செய்வது உங்கள் ராசிக்கு அதிக பலன்களைப் பெற்றுத் தரும். மந்திரம்: ஓம் நம சிவாய நம:
மீனம்: வேலூர் ஜலகண்டேஸ்வரர், வேதாரண்யம் அல்லது திருவானைக்காவல் தலங்களுக்குச் செல்லலாம். பக்தர்களுக்கு நீர், மோர் வழங்கித் தொண்டு செய்வது சிறப்பு. குங்குமப்பூ கலந்த பாலில் அபிஷேகம் செய்து, பஞ்சாட்சர மந்திரம் கூறி வழிபடவும். மந்திரம்: ஓம் நம சிவாய கைலாசபதயே நம:
எந்த ராசியினராக இருந்தாலும், மகா சிவராத்திரி அன்று "மிருத்யுஞ்சய மந்திரம்" சொல்வது ஆயுளையும் ஆரோக்கியத்தையும் வழங்கும்.
"ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம் |
உர்வாருகமிவ பந்தனான்-ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத் ||"
தமிழில் உரையாற்ற முடியவில்லை என்பதற்காக மன்னிப்பு கேட்கிறேன்: மத்திய அமைச்சர் அமித்ஷா
பிறந்த 3 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கடத்தல்: தவெக தலைவர் விஜய் கண்டனம்!
எதிர்பார்ப்பில்லா அன்பைத்தரும் .. ஒவ்வொருவரும் அன்பர்கள்தானே!
வாழ்க்கை எனும் பயணம்... The journey of life is short
நாளை மகா சிவராத்திரி 2026: 12 ராசிகாரர்களும் சிவனருள் பெற வழிபட வேண்டிய முறைகள்
அவர் எல்லாம் ஒரு ஆளா? அதெல்லாம் ஒரு கட்சியா?: நயினார் நாகேந்திரனுக்கு செங்கோட்டையன் பதிலடி!
தனித்திருத்தல்.. நம்மை சீராக்கும்.. You learn a lot by being alone
சிறந்த நாளைக்கான ஒரு எளிய பிரார்த்தனை.. Prayer for a better tomorrow
இலங்கையில் மகா சிவராத்திரி விழா.. முதன்முறையாக செந்தமிழ் திருமுறை வழிபாட்டுடன் அபிஷேகம்!
{{comments.comment}}