- ஸ்வர்ணலட்சுமி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பண்ணாரி அம்மன் கோவில் சுயம்புவாக தோன்றிய மாரியம்மன் அருள் பாலிக்கும் சக்தி வாய்ந்த தலம். மலைவாழ் மக்களின் காவல் தெய்வமாக போற்றப்படும் அம்மனுக்கு பங்குனி மாதம் நடைபெறும் குண்டம் திருவிழா மிகவும் புகழ்பெற்றது ஆகும். பண்ணாரி அம்மன் கோவில் சத்தியமங்கலம் வனப்பகுதி இயற்கை சூழலில் அமைந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் ஒரு முக்கியமான ஆன்மீக தலமாகும்.
பண்ணாரி அம்மன் கோயில் தல வரலாறு :
நீண்ட காலத்திற்கு முன்பு அடர்ந்த காட்டுப்பகுதியான மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அம்மன் புற்று வடிவில் காட்சி அளித்தார். அந்தப் பகுதியில் வசித்த மக்கள் பக்தியுடன் அம்மனை வழிபட்டனர். ஒரு கட்டத்தில் அம்மன் வெளிப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார் என்பது தல வரலாறு.
சுயம்பு உருவம் :
பண்ணாரியில் அம்மன் மாரியம்மன் சுயம்புவாக (தானாகவே) தோன்றியதாக நம்பப்படுகிறது.இந்த அம்மன் ஆதிசக்தியின் வடிவமாக கருதப்படுகிறார்.
தெற்கு நோக்கிய சந்நிதி:

இத்திரு கோவிலில் அம்மன் தெற்கு நோக்கி அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறாள். இக்கோவிலில் உள்ள பண்ணாரி அம்மன் காவல் தெய்வத்தின் சிறப்பம்சமாக கருதப்படுகிறது.
புற்று மண் பிரசாதம் :
இக்கோவிலில் விபூதி, குங்குமத்திற்கு பதிலாக அம்மன் வீற்றிருக்கும் புற்றுமண் பிரசாதமாக வழங்கப்படுகிறது விசேஷம். இது பல நோய்களை குணப்படுத்தும் சக்தியாக நம்பப்படுகிறது. பண்ணாரி ஆலயம் வந்து அம்பாளை மனமுருக வேண்டி கோவிலில் வழங்கப்படும் அம்மன் தீர்த்தத்தை பருகிட கண் சம்பந்தப்பட்ட வியாதிகள் அனைத்தும் குணமாகும் என்பது ஐதீகம்.
குண்டம் திருவிழா:
பங்குனி மாதத்தில் பண்ணாரி அம்மன் குண்டம் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நெருப்பு குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துவர்.
பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழா மார்ச் 16 திங்கட்கிழமை பூச்சாட்டுகளுடன் தொடங்கி முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் மார்ச் 31ஆம் தேதி அதிகாலையில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து மாரியம்மன் சருகு மாரியம்மன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளினர். இதை அடுத்து கடந்த 17ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அம்மனின் சப்பர ஊர்வலம் தொடங்கியது.
சிக்கரசம்பாளையம், இக்கரை நெகமம், வெள்ளியம் பாளையம், கொத்தமங்கலம், தொட்டம்பாளையம், இக்கரை தத்தப்பள்ளி வழியாக அக்கரை தத்தப் பள்ளிக்கு அம்மனின் சப்பர வீதி உலா வந்து அங்கு தங்க வைக்கப்பட்டது. மீண்டும் அடுத்த நாள் காலை அங்கிருந்து புறப்பட்டு உத்தண்டியூர் அய்யன் சாலை வழியாக ராமாபுரம் பகுதிக்கு வந்தடைந்தது. பக்தர்கள் வழிநெடுகிலும் தண்ணீர் ஊற்றி அம்மனை வரவேற்றனர்.
இதனை அடுத்து அங்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் பவானி ஆற்றை படகுமூலம் அம்மனின் சக்கரம் கடந்து தாண்டா பாளையம்,இக்கரை நெகமம், கெஞ்சனூர், திருவள்ளுவர் நகர் வழியாக சத்தியமங்கலம் நோக்கி புறப்பட்டது .
சத்தியமங்கலம் எல்லையான கோம்பு பள்ளம் பகுதியில் இரவு அம்மனின் சப்பர வீதி உலா வந்தடைந்தது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் தாரை தப்பட்டை முழங்க அம்மனை வரவேற்றனர். பின்னர் ஞாயிற்றுக்கிழமை 22 ஆம் தேதி அதிகாலை 1 மணி அளவில் சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை தண்டு மாரியம்மன் கோவிலுக்கு சப்பரம் கொண்டு செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டது. சத்தியமங்கலம் பகுதியில் இரண்டு நாட்கள் அம்மன் திரு வீதி உலா கோலாகலமாக நடைபெறுகிறது.
2026- ஆம் ஆண்டு அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில் குண்டம் பெரும் திருவிழா
நிகழ்ச்சி நிரல்:
16.03.2026 திங்கட்கிழமை திருப்புச்சாட்டு.
24.03.2026 செவ்வாய்க்கிழமை திருக்கம்பம் சாட்டுதல்.
30.03.2026 திங்கட்கிழமை குண்டம் திருவிழா.
31.03.2026 செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணி குண்டம் திருவிழா.
01.04.2026 புதன்கிழமை புஷ்பரதம்.
02.04.2026 வியாழக்கிழமை மஞ்சள் நீராட்டு விழா.
03.04.2026 வெள்ளிக்கிழமை தங்கத்தேர் புறப்பாடு.
06.04.2026 திங்கட்கிழமை மறுபூஜை திருவிழா.
மேலும் இது போன்ற சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.
தாராள குணம் உங்களை காலி செய்துவிடக் கூடாது.. Give but dont let it empty you
தவிர்க்க முடியாத சிறுத்தைகள்.. தடதடக்கும் அரசியல் பாதை.. திரும்பிப் பார்க்க வைக்கும் திருமா
மனுதாக்கல் தொடங்க இன்னும் 4 நாட்கள் மட்டுமே.. முடிவுக்கு வருகிறதா திமுக தொகுதி பங்கீடு!
அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில் குண்டம் பெருந் திருவிழா
புதுச்சேரி சட்டசபை தேர்தல் 2026: திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு
புதுச்சேரியில் தனித்து போட்டி ஏன்? திருமாவளவன் விளக்கம்
திமுக கூட்டணியில் விசிக.,விற்கு 8 இடங்கள் ஒதுக்கீடு
அமமுக போட்டியிட போகும் 11 தொகுதிகளின் உத்தேச பட்டியல்
டாக்டர் அன்புமணியின்.. பாமக போட்டியிட போகும் 18 தொகுதிகள் இதுவா? .. தீயாய் பரவும் தகவல்
{{comments.comment}}