துபாய்: ஆசியா கோப்பையை இந்திய அணியிடம் வேறு ஒருவர் மூலம் வழங்காமல் தானே எடுத்துக் கொண்ட ஆசியா கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரும், பாகிஸ்தான் அமைச்சருமான மோஷின் நக்விக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் அது புகார் செய்யவுள்ளது.
துபாயில் நடந்த ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற பிறகு, இந்திய அணி அவரிடம் இருந்து கோப்பையை வாங்க மறுத்ததால், ஏ.சி.சி. தலைவர் மோசின் நக்வி கோப்பையை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகவும், பாகிஸ்தானின் உள்துறை அமைச்சராகவும் உள்ளார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான உறவில் நிலவும் பதற்றம் காரணமாகவும், மோசின் நக்வியின் சில பேச்சுக்கள் காரணமாகவும் இந்திய அணி நக்வியிடம் இருந்து கோப்பையை ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்தது. நாட்டிற்கு எதிராகப் போரில் ஈடுபட்டுள்ள ஒருவரிடம் இருந்து கோப்பையை இந்தியாவால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று பி.சி.சி.ஐ. செயலாளர் தேவஜித் சைகியா இந்திய அணியின் செயலை நியாயப்படுத்திக் கூறியுள்ளார்.
இந்தியா வாங்க மறுத்ததால், நக்வி கோப்பையையும், பதக்கங்களையும் இந்திய அணியிடம் கொடுக்காமல் எடுத்துச் சென்றது "சிறுபிள்ளைத்தனமான செயல்" என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
நக்வியின் இந்தச் செயலுக்கு எதிராக, வருகின்ற நவம்பர் மாதம் துபாயில் நடைபெறவுள்ள அடுத்த ஐ.சி.சி. கூட்டத்தில் வலுவான எதிர்ப்பைப் பதிவு செய்யப்போவதாக பி.சி.சி.ஐ. செயலாளர் தேவஜித் சைகியா தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்றும், விளையாட்டிற்கு எதிரானது என்றும் அவர் கூறியுள்ளார்.
நல்லதோர் வீணைசெய்தே அதை .. நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ!
டாக்டர் ராமதாஸை தைலாபுரம் சென்று சந்தித்த சி வி சண்முகம்.. அதிமுக கூட்டணியில் இணைவாரா?
நவராத்திரி.. இன்று 8ம் நாள் : அலங்காரம், நைவேத்தியம், மலர், நிறம் முழு விபரம்!
கல்வி, இசை, கலைமற்றும் அறிவின் தெய்வம்.. சரஸ்வதிக்குப் பெயர் வந்தது எப்படி?
தங்கம், வெள்ளி விலையில் தினம் தினம் புதிய உச்சம்... இன்றைய விலை நிலவரம் இதோ!
கரூர் சம்பவத்திற்குப் பின்.. விஜய்யுடன் பேசிய முதல் தலைவர்.. ராகுல் காந்தி திடீர் பேச்சு ஏன்?
நாங்க புறக்கணிச்சா அதுக்காக கோப்பையைக் கொடுக்காம போவீங்களா.. இந்தியா கடும் கோபம்
கரூர் கூட்ட நெரிசல் துயரம்.. கவலைப்படாதீங்க விஜய்.. போன் செய்து ஆறுதல் கூறிய ராகுல் காந்தி
ஆசிய கோப்பையை வாங்க மறுத்த இந்திய கேப்டன்.. வெறும் கையால் கொண்டாடிய இந்திய அணி!
{{comments.comment}}