ஆசிய கோப்பையை வாங்க மறுத்த இந்திய கேப்டன்.. வெறும் கையால் கொண்டாடிய இந்திய அணி!

Sep 29, 2025,10:21 AM IST

துபாய்: துபாயில் நடந்த ஆசியா கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி, அதன் பின்னர் நடந்த கோப்பை வழங்கும் நிகழ்வின் போது பாகிஸ்தான் அமைச்சரின் கையால் கோப்பை வழங்கப்படுவதை எதிர்த்து அதைப் பெற மறுத்து விட்டது. இதனால் வெற்றியை அறிவித்து விட்டு கோப்பையை எடுத்துச் சென்று விட்டனர். இதன் காரணமாக இந்திய வீரர்கள் கோப்பையே இல்லாமல் வெற்றியைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.


ஆசியா கோப்பைத் தொடரில் பல சுவாரஸ்யங்கள் நிகழ்ந்தன. குறிப்பாக பாகிஸ்தான் இந்தியா மோதிய போட்டிகளில் பாகிஸ்தான் அணி வீரர்களுடன் கை குலுக்க இந்திய வீரர்கள் மறுத்தனர். இது சலசலப்பை ஏற்படுத்தியது. இந்தத் தொடரில் மொத்தம் 3 போட்டிகளில் இரு அணிகளும் மோதின. இந்த மூன்றிலுமே நாம்தான் சிறப்பாக ஜெயித்தோம். கடைசியாக நேற்று இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை இந்தியா பிரமாதமாக வீழ்த்தி கோப்பையைத் தட்டிச் சென்றது.




பாகிஸ்தானை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பெற்றும் கூட கோப்பை நம்மிடம் தரப்படவில்லை. இது வினோதமாக அமைந்தது. இதுவரை இப்படி ஒரு நிகழ்வு நடைபெற்றதில்லை.  இதற்குக் காரணம், ஆசியா கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரும், பாகிஸ்தான் அமைச்சருமான மோஷின் நக்விதான் கோப்பையைத் தருவதாக இருந்தது. ஆனால் அதை ஏற்க கேப்டன் சூர்ய குமார் யாதவ் மறுத்து விட்டார். இந்திய அணியின் இந்த முடிவால், பரிசளிப்பு விழா நீண்ட நேரம் தாமதமானது. இந்திய அணி மறுத்த போதும்,  நக்வி மேடையில் நின்று கொண்டே. ஆனால், இறுதிவரை வெற்றியாளர் கோப்பை வழங்கப்படவே இல்லை. கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணிக்கு கோப்பை வழங்கப்படாமல் போனது இதுவே முதல் முறையாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.


வேறு யார் மூலமாவது கோப்பையைக் கொடுத்திருக்கலாம். அப்படிச் செய்யாமல், வெற்றியை மட்டும் அறிவித்து விட்டு கோப்பையை திரும்ப எடுத்துச் சென்று விட்டனர். இந்திய ரசிகர்கள் கணிசமானோர் தாமதத்தையும் பொருட்படுத்தாமல் பரிசளிப்பு விழாவுக்காக மைதானத்தில் காத்திருந்தனர்.


மோசின் நக்விக்குப் பதிலாக, அவருடன் மேடையில் இருந்த எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் துணைத் தலைவர் காலித் அல் சரூனியிடம் இருந்து கோப்பையைப் பெற இந்திய அணி தயாராக இருந்தது. ஆனால், நக்வி இதற்கு சம்மதிக்கவில்லை. நக்வி மேடைக்கு வந்தபோது, ரசிகர்கள் கூட்டாக "பாரத் மாதா கி ஜெய்" என்று கோஷமிட்டனர், மேலும் அவரை எதிர்த்தும் கூச்சலிட்டனர்.


மோசின்ன் நக்வி, சர்ச்சைக்குரிய வகையில், சமூக வலைத்தளங்களில் சில பதிவுகளை வெளியிட்டதுதான் இந்திய அணி அவரை புறக்கணிக்க முக்கியக் காரணம் என்றும், இதனால் அவரிடமிருந்து கோப்பையைப் பெற முடியாது என்றும் இந்திய அணி நிர்வாகம் உறுதியாகத் தெரிவித்திருந்தது.


முழுப் போட்டியிலும் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்குவதைத் தவிர்த்தது மற்றும் டாஸுக்கு முன் நடைபெறும் புகைப்படம் எடுக்கும் நிகழ்வை தவிர்த்தது மூலமும் இந்திய அணி தங்கள் எதிர்ப்பை ஏற்கெனவே வெளிப்படுத்தியிருந்தது.


இந்தச் சம்பவங்களால், இறுதிப் போட்டியில் இந்தியா அடைந்த சிறப்பான வெற்றிக்குப் பின்னும், ஆசிய கோப்பை பரிசளிப்பு விழா பெரும் சர்ச்சையுடன் முடிந்தது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நல்லதோர் வீணைசெய்தே அதை .. நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ!

news

டாக்டர் ராமதாஸை தைலாபுரம் சென்று சந்தித்த சி வி சண்முகம்.. அதிமுக கூட்டணியில் இணைவாரா?

news

நவராத்திரி.. இன்று 8ம் நாள் : அலங்காரம், நைவேத்தியம், மலர், நிறம் முழு விபரம்!

news

கல்வி, இசை, கலைமற்றும் அறிவின் தெய்வம்.. சரஸ்வதிக்குப் பெயர் வந்தது எப்படி?

news

தங்கம், வெள்ளி விலையில் தினம் தினம் புதிய உச்சம்... இன்றைய விலை நிலவரம் இதோ!

news

கரூர் சம்பவத்திற்குப் பின்.. விஜய்யுடன் பேசிய முதல் தலைவர்.. ராகுல் காந்தி திடீர் பேச்சு ஏன்?

news

நாங்க புறக்கணிச்சா அதுக்காக கோப்பையைக் கொடுக்காம போவீங்களா.. இந்தியா கடும் கோபம்

news

கரூர் கூட்ட நெரிசல் துயரம்.. கவலைப்படாதீங்க விஜய்.. போன் செய்து ஆறுதல் கூறிய ராகுல் காந்தி

news

ஆசிய கோப்பையை வாங்க மறுத்த இந்திய கேப்டன்.. வெறும் கையால் கொண்டாடிய இந்திய அணி!

அதிகம் பார்க்கும் செய்திகள்