பசி!

Nov 13, 2026,11:36 AM IST
- பா. பானுமதி

நித்தியாவும் எழிலனும் வேலைக்குச் செல்லும் கணவன் மனைவி. அவர்களின் நான்கு வயது அழகிய மகள் வான்மொழி.  நித்தியா கார்மெண்ட்ஸில் வேலை. நான்கு மணிக்கு எல்லாம் வீட்டிற்கு வந்துவிடுவாள். வரும்போது பள்ளிக்குச் சென்று வான்மொழியை அழைத்துக் கொண்டு வருவாள். அவள் கணவன் வீட்டிற்கு வர ஏழு மணி ஆகிவிடும்.

நிதமும் குழந்தையை அழைத்து வந்து பிரிட்ஜில் உள்ள பாலை எடுத்து காய்ச்சி இரண்டு பிஸ்கட் அல்லது கேக் என்று ஏதேனும் வைத்து குழந்தைக்குச் சாப்பிடத் தருவாள். பண்டிகைக் காலம் என்பதால் அவளால் அன்று மாலை சீக்கிரமாக வீட்டுக்கு வர இயலவில்லை. முன்கூட்டியே கணவனிடம் தகவல் சொல்லிவிட்டாள். நீங்களே குழந்தையை வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள் இன்று ஒரு நாள் மட்டும் என்று.



குழந்தையை அழைத்துக் கொண்டு அவனும் வீட்டுக்கு வந்துவிட்டான். இருவருக்கும் நல்ல பசி. வான்மொழி, அம்மா இருந்தால் நன்றாக இருக்கும், பசிக்கு ஏதாவது செய்து தருவாள். இப்போது என்ன செய்யலாம் என்று மகளிடம் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார். அந்தக் குழந்தையும் வேகமாக ஓடிச் சென்று, பிரிட்ஜில் இருந்து பாலை எடுத்து அப்படியே டம்ளரில் ஊற்றி பிஸ்கட்டை தட்டில் வைத்து கொண்டு வந்து அப்பாவிடம் தந்தாள்.

அப்பா அதைக் கண்டு அப்படியே ஆச்சரியத்தில் நின்றுவிட்டார். காச்சாத பாலை தந்தாலும் அவள் கரிசனம் கண்டு அவர் கண்கள் கலங்கியது. மகளை வாரி அணைத்து அந்தப் பாலை, கொண்டுபோய் அடுப்பில் வைத்து காய்ச்சி இருவரும் குடித்தார்கள். வீட்டுக்கு வந்த நித்தியா, அடுப்படியெல்லாம் பால் சிந்தி இருந்தாலும் அவர்களை நினைத்து பூரித்தாள்.

மகள் இருந்தாலே மகிழ்ச்சிதானே!

(கவிஞர் பா. பானுமதி, ஆசிரியர், பட்டிமன்றப் பேச்சாளர், எழுத்தாளர். மதுரையைச் சேர்ந்தவர்)
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்