- பாரதிராஜன்
சென்னை மயிலையில் வசித்த காலத்தில் ராமகிருஷ்ண மடத்தின் நூலகம் தான், நான் முதல் முதலாகச் சென்றது. அதற்கு முன்பு வாலாஜாபாத் வாசியாக இருந்த போது என் தாத்தா பள்ளிக்கூட தலைமை ஆசிரியராக இருந்ததால் வீட்டுக்கே தமிழ், ஆங்கில நாளிதழ்கள்,வார, மாத இதழ்கள் வரும். அதனால் நூலகம் தேடிபோனதில்லை.
அதன்பிறகே நூலகம் பற்றிய புரிதல் வந்தது. பிறகு வேலூர் ஸ்ரீவெங்கடேஸ்வரா பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது எதிரிலேயே மாவட்ட நூலகம், தினமும் மாலை பள்ளி விட்டதும் நூலகம், அதன்பிறகே வீட்டுக்குச் செல்வேன்.
காஞ்சிபுரத்தில் கல்லூரி படித்த போது ரங்கசாமி குளம் அருகிலுள்ள அரசு நூலகம், பேருந்து நிலையம் அருகேயுள்ள ராமகிருஷ்ண நூலகம்.
பட்டபடிப்பு முடித்த பின் சிங்கார சென்னை நோக்கி வேலைக்காக பயணம். அந்த சமயத்தில் நான் மேற்கு மாம்பல வாசி. அசோக்நகர் நூலகம், பாண்டிபஜார் அஞ்சல் அலுவலகம் அருகேயுள்ள அரசு நூலகம். அங்கே பணிபுரிந்த நூலகர் பி.ஏ படிக்க ஆசைப்பட்ட நிலையில் மைசூர் பல்கலைகழகம் மூலமாக படிக்க ஏற்பாடு செய்தேன்.

பிறகு அரியலூர், ஈரோடு வேலை நிமித்தமாக இருந்த போது அந்தந்த இடத்தில் இருந்த நூலகங்கள். சென்னையில் இருந்த போது பிரிட்டிஷ் நூலகம், அமெரிக்க நூலக உறுப்பினர். திருவண்ணாமலையில் பணிபுரிந்த போது அந்த மாவட்ட நூலக உறுப்பினர். திருமணத்திற்கு பின் சிங்கார சென்னை வாசம் இன்றைய தினம் வரை.
அம்பத்தூரிலுள்ள நூலக உறுப்பினர். எனக்கு வரும் புத்தகங்கள் அம்பத்தூர் நூலகத்திற்கு கொடுப்பது வழக்கமாக செயல் ஆனது. எனக்கு மகள் பிறந்த பிறகு அவளின் 6ஆம் வயதில் அம்பத்தூரிலுள்ள நூலகம் அழைத்து சென்று நூல்கள் வாசிப்பு அறிமுகம். அவளின் நூலக வாசிப்பு அவள் 12வயது வரை தொடர்ந்தது.
என் மகள் படித்த பள்ளியில் அவரவர் பிறந்த தினம் அன்று புத்தகம் நன்கொடை வழங்கலாம். என்மகள் எல்.கே.ஜி முதல் +2 வரை ஒரே பள்ளி, அவள் பிறந்த தினத்திற்கு அவள் கொடுத்த புத்தக மதிப்பு சுமாராக ரூ2,500/<இது தவிர அவளின் சில நண்பர்களுக்கும் புத்தகம் வாங்கி தருவாள்.
பணியில் இருந்து ஓய்வுபெற்ற பின் தினமும் இரண்டு அல்லது மூன்று மணிநேரம் நூலகமே கதி. பிறகு 4வருடம் பெங்களுர் வாசம். சில்க்போர்ட் அருகே நூலகம் தேடித்தேடி கண்டுபிடித்து பிடிஏ காம்பளக்ஸ் அருகிலுள்ள ஒரு சிறப்பு பள்ளி பேஸ்மெண்ட்டில் நூலகம். தமிழகத்தில் நூலகத்திற்கு வாரவிடுமுறை வெள்ளி, இரண்டாவது சனி &அரசு விடுமுறை நாட்கள். பெங்களூரில் திங்கள், இரண்டாவது செவ்வாய் & அரசு விடுமுறை.
மகளுக்கு திருமணம் முடிந்து அமெரிக்காவிலுள்ள பாஸ்டன் வாசம். மகளின் பிரசவத்திற்காக 2022ல் பாஸ்டன் சென்றதும் அங்குள்ள மில்லிஸ் நூலகத்திற்கு என் மகள் அழைத்துச்சென்றாள். பெரிய இடம் விஸ்தாரமாக புத்தகங்கள், சிறிய குழந்தைகள் விளையாட அருமையாக இருந்தது. முழுவதும் குளிரூட்டப்பட்ட இடம்.
வாரவிடுமுறை ஞாயிறு.
இந்த ஆண்டு சென்ற போது நான்,என் மகள்& பேத்தி [31/2வயது] போய் வந்தோம். இது தவிர பூங்காக்களில் புத்தகங்கள் நாமும் கொண்டு போய் வைக்கலாம் படிக்க எடுத்து வரலாம். அவ்வளவு ஏன் மிருககாட்சி க்கு சென்ற போது அங்கேயும் புத்தகங்கள் ஷெல்பில் இருந்தது. அங்குள்ள லக்ஷ்மி கோவிலில் கூட நூலகம் இருக்கிறது.
அமெரிக்காவிலுள்ள பாஸ்டனில் உள்ள மில்லிஸ் நூலகத்தில் ஒரு ஆங்கில புத்தகம் எடுத்து வந்தேன். வாசிக்க தான்.
Who was Leonardo da vanci. மொத்தம் 106 பக்கம் ஒவியர் பற்றிய கதை 104பக்கம். எல்லா நாட்டிலும் எழுத்தாளர்கள், ஒவியர்கள் வாழ்க்கை இனியதாக இல்லை என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது.
நம் ஊரிலே பாரதியார் ஒருவர் போதுமே.
லியானார்டா டொவின்சி பிறந்ததும் அவர் தந்தை தாயையும், மகனையும் பிரிகிறார். தாயும் கொஞ்ச நாள் கழித்து தாயின் வயதான பெற்றோரிடம் விட்டுவிட்டு செல்கிறார். லியானார்டா டாவின்சி எல்லா சிறுவர்களைப்போல் பள்ளிக்கூட வாழ்க்கை அமையவில்லை. ஒரு நண்பருடன் நாள் முழுக்க சுற்றுவதே லியானார் வேலை. சுற்றுப்புறத்தைப் பார்த்து அதில் மயங்கி கிறுக்க ஆரம்பித்தார்.
கொஞ்ச கொஞ்சமாக ஒவியம் வரைய ஆரம்பித்தார். தாத்தா பாட்டியால் அதனை ரசிக்க இயலாத நிலை.
ரொம்ப ரொம்ப வருத்தமான விஷயம். அவர் பெரிய மனிதனாக ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறார். நான் அந்த புத்தகம் ஏன் எடுத்தேன், எனக்கும் ஒவியத்திற்கும் காத தூரம். உண்மையான கலைஞர்களை இந்த உலகம் தாமதமாகத்தான் கண்டு கொள்கிறது.
(எழுத்தாளர் பாரதிராஜனின் இயற்பெயர் ரங்கராஜன் , பாரதியார் பாடல்கள் மேல் உள்ள காதலால் பாரதிராஜன் என்கிற புனைப்பெயரில் கதை கட்டுரை மற்றும் கவிதை எழுதி வருகிறார். சென்னை அம்பத்தூரில் வசித்து வருகிறார்)
முகம் மலரோ தாமரைப்பூ.. மனம் மணமோ மல்லிகைப்பூ!
வேறு முகங்கள்!
நூலகமும் நானும்.. மயிலாப்பூர் முதல் பாஸ்டன் வரை!
அமைதியா இரு
Short Story by Sudha Thirunarayanan: பை!
தலையங்கம்: நாட்டின் பாதுகாப்பில் பெண்மையின் பேராற்றல்.. CRPF Women Battalion turns 40!
ஜெம் கிரானைட் வீரமணி வழக்கு: அடுத்தடுத்து சிக்கும் நபர்கள்... தீவிரமடையும் விசாரணை
பிரே பண்ணிட்டு சாப்பிடுவோமா?.. நீட்டிக்கப்பட்ட காலை உணவுத் திட்டம்.. தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்
திமுக.,வுக்கும் ஜெம் கிரானைட்ஸ் வீரமணிக்கும் தொடர்பு இல்லை: முன்னாள் அமைச்சர் ரகுபதி
{{comments.comment}}