புயல் வேகத்தில் வீடுகளைக் கடக்கும் புரட்டாசி...  வர்றீங்களா.. "சைவ ஆம்லேட்" சாப்பிடலாமா??

Oct 16, 2023,03:43 PM IST

- மீனா


"முட்டையிலிருந்து கோழி வந்ததா அல்லது கோழியிலிருந்து முட்டை வந்ததா" 


இதெல்லாம் ஒருவரோட அறிவு திறமையை பரிசோதிக்கும் விதமாக  மற்றவர்களிடம் கேட்கப்படும் கேள்வி (அப்படின்னு இன்னும் கூட நினைச்சிட்டிருக்காங்க).. என்னிடம் கூட அனேகர் இந்த கேள்வியை கேட்டிருக்கிறார்கள். ஆனால் சத்தியமாக எனக்கு இந்தக் கேள்விக்கு பதில்  தெரியாதுங்க. ஆனால் முட்டையே இல்லாமல் முட்டை ஆம்லெட் முட்டை பொரியல் எப்படி வரும்னு மட்டும் தெரியும். 


கோழியிலிருந்து முட்டை வந்ததா அல்லது முட்டையிலிருந்து கோழி வந்ததா என்று விவாதித்துக் கொண்டு டைம் வேஸ்ட் பண்ணாம.. டக்குன்னு உடைச்சோமா.. ஆம்லேட் போட்டு சாப்பிட்டோமான்னு போய்ட்டே இருக்கணும்.. சரி புரட்டாசி மாசத்துல என்ன பண்றது.. இது நியாயமா கேள்விதான்.. 




அதுக்கும் வழி இருக்கே..  முட்டையே இல்லாமல் "ஆம்லெட், பொரியல்" போட்டு அசத்தலாமே... எப்படிங்கன்னு எல்லோருக்கும் ஒரே ஆச்சரியமா இருக்குல்ல.. வாயைப் பொளக்காதீங்க.. நிஜமாவே இப்படி ஒரு ரெசிப்பி இருக்குங்க!


அதுவும் இல்லாமல் புரட்டாசி புயல் வேகத்தில் நம்மை கடந்து கொண்டு இருக்கிறது. புரட்டாசி மாதத்தில் முட்டை  சாப்பிடாதவர்கள் அநேகர் உண்டு. அதனால் திடீரென முட்டை சாப்பிடணும்னு தோணுச்சுன்னா இந்த மாதிரி கூட  நம்ம செஞ்சு சாப்பிட்டுக்கலாம் இல்ல. இது எப்படி செய்யறது வாங்க அந்த ரெசிபியைப் பார்க்கலாம்...!


சைவ ஆம்லெட் செய்வதற்கு தேவையான பொருட்கள்:


வெங்காயம்- 2 (சின்ன சைஸ்)

பச்சை மிளகாய்-1

கடலை மாவு-2 ஸ்பூன் 

கருவேப்பிலை-சிறிதளவு

கொத்தமல்லி-பொடியாக வெட்டியது சிறிதளவு

மிளகுத்தூள்-

தேவைக்கேற்ப 

உப்பு-தேவைக்கேற்ப

சோடா உப்பு-ஒரு பிஞ்சு அளவு

நல்லெண்ணெய்-2 ஸ்பூன் 


செய்முறை:


முதலில் கடலை மாவில் தேவையான  அளவு உப்பு, சோடா உப்பு சேர்த்து கட்டி இல்லாமல் தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து    நல்லெண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை இதையெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக பாத்திரத்தில் போட்டு இதனுடன் சிறிது உப்பும் சேர்த்து ஓரளவுக்கு வதக்கி கொள்ள வேண்டும்.


பிறகு இந்த கலவையை கரைத்து வைத்துள்ள கடலை மாவில் போட்டு நன்கு கலக்கி அடுப்பில் தோசை கல்லை வைத்து அதில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி பிறகு இந்த கலவையை ஊற்றி  கரண்டியை வைத்து பரப்பி விட்டு சுத்தியும் எண்ணெய்  விட்டு சிம்மில்  வேக வைத்து எடுத்தால் சைவ ஆம்லெட் ரெடி.


ஆம்லேட் சரி.. முட்டை பொறியல் எங்கே என்று யோசிக்கிறீங்களா.. அட, அடுத்து அதுதாங்க.. வாங்க!

சைவ முட்டை பொரியல் 




செய்ய தேவையான பொருட்கள்:


கடலை மாவு-4  ஸ்பூன்

பொட்டுக்கடலை மாவு-1 ஒரு ஸ்பூன்

வெங்காயம்-3  மீடியம் சைஸ்

தக்காளி-2

மிளகாய்-1

கடுகு, சீரகம்-தாளிப்பதற்கு தேவையான அளவு

கருவேப்பிலை ,மல்லி-

தேவையான அளவு

மிளகுத்தூள்-1  ஸ்பூன்

நல்லெண்ணெய்- 3 ஸ்பூன்

சோடா உப்பு-ஒரு பின்ச் அளவு

உப்பு-தேவைக்கேற்ப


செய்முறை:


முதலில் கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு ,சோடா உப்பு , உப்பு இவை எல்லாவற்றையும் தண்ணீர் ஊற்றி ஓரளவிற்கு  கெட்டியாக கரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு ,சீரகம், கருவேப்பிலை போட்டு தாளித்தவுடன் அதில்  நறுக்கிய வெங்காயம், தக்காளி  தேவையான அளவு உப்பு போட்டு நன்கு வதக்க வேண்டும்.


மறுபடியும் வேறு ஒரு அகலமான  பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் கரைத்து வைத்துள்ள கடலை மாவு கலவையை ஊற்றி ஓரளவிற்கு விட்டுவிட்டு கிளற வேண்டும். இந்த மாவு கிளறும் போது முட்டை பொரியல் வெந்த மாதிரி வடிவில் வரும் அதை அப்படியே எடுத்து வெங்காயம் ,தக்காளி வதக்கிய கலவையில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து அதன் பிறகு மிளகுத்தூள் போட்டு  கிளறிவிட்டு கடைசியில் நறுக்கிய கொத்தமல்லி இலையை தூவினால் சைவ முட்டை பொரியல் ரெடி. 


இதை பார்க்கும்போது உங்களுக்கும் செஞ்சு பார்க்கணும்னு தோணுதா.. வாயில எச்சில் ஊறுதா.. அப்புறம் எதுக்கு "இதை" படிச்சுட்டிருக்கீங்க.. சீக்கிரமா போய் செஞ்சு சாப்பிட்டு பார்த்து வந்து மறக்காம கருத்தை சொல்லுங்க!

சமீபத்திய செய்திகள்

news

Cabinet Reshuffle: பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்.. மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராகிறார்!

news

அமைச்சர்கள் நீக்கம்.. தானாக எடுத்தது அல்ல.. தவிர்க்க முடியாமல் எடுக்கப்பட்டது.. டாக்டர் தமிழிசை

news

IPl 2025.. எல்லை தாண்டி எகிறி அடிக்கும் வீரர்கள்.. ஐபிஎல்லில் இதுவரை குவிக்கப்பட்ட Super சிக்சர்கள்!

news

துபாய், சிங்கப்பூர், கொழும்பு வழியாக.. பாகிஸ்தானுக்கு தங்கு தடையின்றி செல்லும்.. இந்தியப் பொருட்கள்!

news

பஹல்காம் தாக்குதல் .. மத்திய அரசு, ராணுவம் குறித்து விமர்சனம்.. நாடு முழுவதும் 19 பேர் கைது

news

விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு.. முதல் முறையாக.. தேமுதிக பொதுக்குழு கூட்டம்.. 30ம் தேதி!

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

அதிகம் பார்க்கும் செய்திகள்