சென்னை: 2 வீடுகளுடன், கலக்கலாக கோலாகலமாக தொடங்கியுள்ளது பிக் பாஸ் தமிழ் சீசன் 7. கமல்ஹாசன் மீண்டும் தொகுத்து வழங்கும் இந்த சீசனில் விறுவிறுப்புக்குப் பஞ்சம் இருக்காது என்று நம்பலாம்.
விஜய் டிவியின் முத்திரை நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் தமிழ் சீசன் 7 இன்று கோலாகலமாக தொடங்கியது. கமல்ஹாசன் மீண்டும் தொகுப்பாளராக களம் காண்கிறார்.
2017ம் ஆண்டு முதல் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ, விஜய் டிவியில் வருடா வருடம் நடந்து வருகிறது. முதல் சீசன் 98 நாட்கள் நடைபெற்றது. வெற்றியாளராக ஆரவ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2018ம் ஆண்டு நடந்த 2வது சீசனில் நடிகை ரித்விகா வெற்றி வாகை சூடி, பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் வெற்றி பெற்ற முதல் பெண்ணாக சாதனை படைத்தார். இந்த ஷோவானது 105 நாட்கள் நடைபெற்றது.
2019ம் ஆண்டு நடந்த 3வது சீசனின் வெற்றியாளராக முகென் ராவ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுவும் 105 நாட்களுக்கு நடைபெற்றது.
2020ம் ஆண்டு 4வது சீசன் நடந்தேறியது. இந்த சீசனின் வெற்றியாளராக ஆரி தேர்ந்தெடுக்கப்பட்டார். 2021ம் ஆண்டு நடந்த 5வது சீசனின் வெற்றியாளராக நடிகர் ராஜு மோகன் வெற்றி பெற்றார்.
அதிரடியாக பெரும் பரபரப்புடன் நடந்த சீசன் என்றால் அது பிக் பாஸ் 6தான். குறிப்பாக வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட அஸீம் கடும் எதிர்ப்புகளையும், வசவுகளையும் சந்தித்தார். அவரது பிஹேவியர் கடும் சலசலப்புகளையும், விமர்சனங்களையும் சந்தித்தது. ஆனாலும் அவர் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேசமயம், மக்களின் மனம் கவர்ந்த விக்ரமன் 2வது இடத்தையே பிடித்தார்.
இந்தப் பின்னணியில் தற்போது பிக் பாஸ் 7 சீசன் தொடங்கியுள்ளது. இந்த முறை பல்வேறு விதி மாற்றங்கள் வந்துள்ளன். வீடுகளும் 2 ஆகியுள்ளது. வித்தியாசமான போட்டியாளர்களுடன் இந்த சீசன் எப்படி இருக்கும் என்பது போகப் போகத் தெரியும்.
தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அலர்ட்!
பசி,பட்டினியை போக்கவில்லை... தீபம் ஏற்ற வேண்டும் என கூறுகிறார்கள்: சீமான் ஆவேசம்!
வானுயர் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
மெஸ்ஸியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஆவேசம்... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி!
திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்கள்: அன்புமணி ராமதாஸ் வேதனை!
ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!
Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!
சினிமாத் துறையினரை தொடர்ந்து பாதிக்கும் மன அழுத்தம்.. உரிய கவுன்சிலிங் அவசியம்!
Amma's Pride ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் சென்னையில் உருவான குறும்படம்!
{{comments.comment}}