பிக்பாஸ் சீசன் 7 : 18 போட்டியாளர்கள்.. யார் யார்.. ஃபுல் லிஸ்ட் இதோ!

Oct 01, 2023,10:50 PM IST

சென்னை : பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் 7 வது சீசன் இன்று மாலை பிரம்மாண்ட துவக்க விழாவுடன் துவங்கி உள்ளது. இதில் 18 போட்டியாளர்கள் பங்கேற்கிறார்கள்.


விஜய் டிவியின் புகழ்பெற்ற, அதிக ரசிகர்களைக் கொண்ட ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் தமிழின் 7 வது சீசன் இந்த ஆண்டு ஜூலை - ஆகஸ்ட் மாதமே துவங்கும் என எதிர்பார்க்கப்படும். ஆனால் இந்த ஆண்டும் அக்டோபர் மாதமே துவங்கப்பட்டுள்ளது. கடந்த 6 சீசன்களை போலவே இந்த சீசனையும் கமலே தொகுத்து வழங்க உள்ளார். இதற்காக கமலுக்கு ரூ.150 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.


பிக்பாஸ் சீசன் 7 ல் இரண்டு வீடுகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முறை அதிகபட்சமாக 20 போட்டியாளர்கள் பங்கேற்கிறார்கள். இது போன்ற நிகழ்ச்சி பற்றிய பல தகவல்கள் அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டு விட்டது. ஆனாலும் வழக்கம் போல் இந்த ஆண்டும் போட்டியாளர்கள் யார் என்பது பற்றி பல தகவல்கள், வதந்திகள் சோஷியல் மீடியாவில் தாறுமாறாக பரவி வந்தன. இதை அனைத்திற்கும் முடிவு கட்டும் நாளாக அக்டோபர் 01 ம் தேதியான இன்று பிக்பாஸ் சீசன் 7 துவங்கி உள்ளது. 




போட்டியாளர்கள் விவரம்:

மொத்தம் 18 போட்டியாளர்கள் இதில் பங்கேற்கின்றனர். அவர்கள் குறித்த முழு விவரத்தை கீழே பார்க்கலாம்.


1. ரவீனா தாஹா - மெளன ராகம் சீசன் 2 சீரியல் நடிகை 

2. மாயா கிருஷ்ணன் - விக்ரம், துருவ நட்சத்திரம் பட நடிகை

3. ஜோவிகா விஜய்குமார் - நடிகை வனிதா விஜயகுமாரின் மகள்

4. கூல் சுரேஷ் - நடிகர்

5. விஷ்ணு விஜய் - கனா காணும் காலங்கள் சீரியல் நடிகர்

6. சரவணன் விக்ரம் - பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர்

7. பிரதீப் ஆன்டனி - அருவி பட நடிகர், முன்னாள் போட்டியாளர் கவினின் நண்பர்

8. வினுஷா தேவி - பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை

9. பூர்ணிமா ரவி - யூட்யூப் பிரபலம்

10. ஐஷு 

11. மணி சந்திரா

12. அக்ஷயா உதயக்குமார்

13. நிக்ஸன்

14. பின்னணிப் பாடகர் யுகேந்திரன்

15. நடிகை விசித்ரா

16. எழுத்தாளர் பவா செல்லதுரை

17. அனன்யா ராவ்

18. விஜய் வர்மா

சமீபத்திய செய்திகள்

news

நேபாளத்தில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு: 14 பேர் பலி

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

தாய்!!!

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்