பிக்பாஸ் தமிழ் சீசன் 7... போட்டியாளராக களமிறங்கும் பிகில் பட நடிகை

Aug 26, 2023,01:44 PM IST
சென்னை : பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி அக்டோபர் மாதம் துவங்கப்பட உள்ளதாக சொல்லப்பட்டு வரும் நிலையில், இதில் போட்டியாளர்களில் ஒருவராக பிகில் படத்தில் நடித்த நடிகையும் பிக்பாஸ் வீட்டிற்குள் போக போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 7வது சீசன் இன்னும் சில வாரங்களில் துவங்க உள்ளது. இதற்கான போட்டியாளர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. கடந்த சீசன்களை போலவே இந்த சீசனையும் கமலே தொகுத்து வழங்க போகிறார். 




லேட்டஸ்ட் தகவலின் படி, விஜய் டிவி தொகுப்பாளர்கள் மாகாபா ஆனந்த், ஜாக்குலின், நடிகை ரக்ஷிதாவின் கணவர் தினேஷ் கோபால் சாமி, இரவின் நிழல் சீரியல் நடிகை ரேகா நாயர், பத்திரிக்கையளரும் நடிகருமான பைல்வான் ரங்கசாமி, நடிகர் ப்ருத்விராஜ், கோவை பஸ் டிரைவர் ஷர்மிளா, செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் உள்ளிட்டோர் போட்டியாளர்கள் லிஸ்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

மற்றொரு புதிய தகவலாக இவர்களுடன் பிகில் படத்தில் பழனியம்மாள் கேரக்டரில் நடித்து பிரபலமான நடிகையும், நடிகர் ரோபோ ஷங்கரின் மகளுமான இந்திரஜா ஷங்கரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகிறாராம். இவர் சமீபத்தில் தான் தனது திருமணம் பற்றி தகவலை வெளியிட்டார். தனது மாமாவை திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கைக்குள் நுழைவதற்கு முன், பிக்பாஸ் வீட்டிற்குள் போய் கலக்க போகிறாராம். இன்னும் யாரெல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தந்தை வழியில் நடிகையாக கலக்கி வரும் இந்திரஜா சங்கருக்கு பிகில் படம்தான் மிகப் பெரிய பிரேக் கொடுத்தது. அதைத் தொடர்ந்து இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி நாயகியாக நடித்த படத்தில் அவருக்கு தோழியாக கலக்கலான நடிப்பைக் கொடுத்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

தீயசக்தி திமுக.,விற்கும் தவெக.,விற்கும் தான் போட்டி...ஈரோட்டில் விஜய் மாஸ் பேச்சு

news

தமிழகத்தை ஆளப்போவது புரட்சி தளபதி விஜய் தான்: செங்கோட்டையன்

news

எதிர்மறை எண்ணங்கள்.. எப்போதும் பிரகாசமான எதிர்காலத்தைத் தராது!

news

மக்களை காக்க குரல் கொடுக்கச் சொன்னால், டெல்லியை குளிர்விக்க அறிக்கை விடுகிறார்:முதல்வர் முக ஸ்டாலின்

news

கரூருக்கு வரமாட்டீங்களா?...ஈரோட்டில் விஜய்க்கு எதிரான போஸ்டர்களால் பரபரப்பு

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 18, 2025... இன்று நல்ல காலம் பிறக்குது

news

தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் வெள்ளி விலை... இதோ இன்றைய விலை நிலவரம்!

news

மார்கழி 03ம் நாள் வழிபாடு : திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 03 வரிகள்

news

திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோவிலில் மார்கழி,15 சொர்க்க வாசல் திறப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்