பாட்னா: தமிழ்நாட்டில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும், கொல்லப்படுவதாகவும் பொய்யான தகவல்களை திட்டமிட்டு பரப்பிய பீகாரைச் சேர்ந்த அமன் குமார் என்ற நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் பொய்யான வீடியோக்களை இந்த நபர் பதிவு செய்ததாக பீகார் போலீஸார் தெரிவித்துள்ளனர். பீகாரின் ஜமுயி என்ற மாவட்டத்தில் வைத்து இந்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் மொத்தம் நான்கு பேரை போலீஸார் முதல் தகவல் அறிக்கையில் சேர்த்துள்ளனர். மற்ற மூன்று பேர் ராகேஷ் திவாரி, யுவராஜ் சிங் ராஜ்புத் மற்றும் மனீஷ் காஷ்யப் என்று தெரிய வந்துள்ளது. அமன்குமார், ஜமுயி மாவட்டத்தில் உள்ள லக்ஷமிபூர் என்ற பகுதியைச் சேர்ந்தவன். மற்ற 3 3 பேரும் தலைமறைவாகி விட்டனர்.

இந்த நான்கு பேர் கொண்ட கும்பல் தமிழ்நாட்டுக்கு எதிராக திட்டமிட்டு வதந்தி பரப்பியுள்ளது. கிட்டத்தட்ட 30 அவதூறான, தவறான வீடியோக்களை இந்தக் கும்பல் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவேற்றம் செய்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் வசிக்கும் பீகார் தொழிலாளர்கள் பீதி அடைந்து வெளியேற வேண்டும் என்பதே இவர்களது திட்டமாகும்.
இதற்கிடையே, இது போல திட்டமிட்டு பரப்பப்பட்ட 42 வீடியோக்களை நீக்குமாறு யூடியூப், பேஸ்புக், டிவிட்டர், ஜிமெயில் நிறுவனங்களுக்கு காவல்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதில் பேஸ்புக்கில் 9 வீடியோக்கள், டிவிட்டர் யூடியூபில் தலா 15, ஜிமெயில் மூலம் 3 வீடியோக்கள் பரப்பப்பட்டுள்ளன.
தனியா.. கெத்தா.. மாமல்லபுரத்தில் சொன்னது போல நடக்கப் போகிறாரா விஜய்?
விஜய் உடன் சேர்ந்தால் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரலாம்...ஆரூடம் சொல்லும் எஸ்ஏசி
கண்களின் பார்வையில்.. காதல் கொண்டேனே!
25 சீட்டுதானா.. அல்லது கூடுதலாக கிடைக்குமா.. எதிர்பார்ப்பில் காங்கிரஸ்.. என்ன நடக்கும்?
இந்தியாவின் பொருளாதாரம் சீராக உள்ளது...பட்ஜெட் தொடர் உரையில் ஜனாதிபதி பெருமிதம்
தென்றலே... என் தொலைந்து போன நிழலே!
இந்தியா பக்கம் வராதீங்க.. அப்புறம் அடி தாங்கமாட்டீங்க!.. பாக். அணிக்கு ஸ்ரீகாந்த் எச்சரிக்கை!
சேலம் அங்காள பரமேஸ்வரி ஆலயம் மாசி திருவிழா கொடியேற்றம் கோலாகலம்!
அடிமட்ட மக்களுடன் நெருக்கமாக இருந்தவர் அஜீத் பவார்.. பிரதமர் மோடி இரங்கல்
{{comments.comment}}