பாட்னா: பீகாரில் கடும் வெப்ப அலை வீசிவருவதால் பள்ளி சென்ற மாணவிகள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தை கடந்த சில நாட்களுக்கு முன்னர் வாட்டி வதைத்த வெப்பம், தற்போது இந்தியாவின் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் கடுமையாக உள்ளது. இந்த வெப்பத்தினால் மக்கள் வீட்டை விட்டு வெளியில் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வெப்பத்தினால் மக்கள் வெளியில் வர வேண்டாம் என்று அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டெல்லியில் கடும் வெயில் வெளுத்து வருகிறது. அங்கெல்லாம் 120 டிகிரி அளவுக்கு வெயில் கொளுத்திக் கொண்டுள்ளது. பெரும்பாலான வட மாநிலங்களில் கடுமையான வெப்ப அலை வீசி வருவதால் மக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
பீகார் மாநிலம் ஷேக்புரா மாவட்டத்தில் உள்ள அரியாரி பிளாக்கில் உள்ள மன்கவுல் நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் இன்று காலை இறை வணக்க கூட்டம் நடந்தது. இந்த நிகழ்விற்காக மாணவர்கள் அனைவரும் ஒன்று கூடியிருந்தனர். அப்போது காலை வேலையிலேயே வெயில் அதிகம் அடித்ததால், இறைவணக்கம் செய்து கொண்டிருந்த 7 மாணவர்கள் ஒன்றன் பின் ஒன்றாக மயங்கி கீழே விழுந்தனர். இதனால் அங்கு சற்று நேரத்திற்கு பரபரப்பு ஏற்பட்டது.
மயங்கி விழுந்த மாணவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் 7 பேரும் ஷேக்புராவில் உள்ள சதர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது தொடர்பாக சதார் மருத்துவமனை டாக்டர் கூறுகையில், வெப்பநிலை அதிகரித்ததால் மாணவிகள் கடினமான நிலையை எதிர்கொண்டனர். அவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நல்ல நிலையில் உள்ளனர். வெப்பம் காரணமாக உடலில் இருந்து வியர்வை மூலம் அதிக அளவில் நீர் வெளியேறும் என்பதால், அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
தமிழ்நாடு தலைகுனியாது.. 234 தொகுதிகளிலும்.. பிரச்சாரத்தைத் தொடங்கும் திமுக
விஜய்யின் நிலைப்பாடு என்ன என புரியவில்லை... செங்கோட்டையன் விவகாரம் குறித்து டிடிவி தினகரன் விளக்கம்
ஜனநாயகன் பட வழக்கை மீண்டும் தனி நீதிபதி விசாரிக்க சென்னை ஹைகோர்ட் உத்தரவு
திமுக - அதிமுக ஜல்லிக்கட்டு.. எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட 2 முக்கிய அறிவிப்புகள்!
கல்விக்கடன் தள்ளுபடி வாக்குறுதி என்ன ஆனது? திமுக அரசிற்கு ராமதாஸ் கேள்வி!
மதுரையிலிருந்து ஏன் என்னை வம்புக்கு இழுக்கிறீர்கள்.. எம்.எல்.ஏ தளபதிக்கு ஜோதிமணி கேள்வி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
சென்னை விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து: பயணிகள் அலறியடித்து ஓட்டம்!
மக்கள் பாதுகாப்பைப் பறிக்கும் திமுக அரசின் முடிவுகாலம் வெகு தொலைவிலில்லை: நயினார் நாகேந்திரன்
{{comments.comment}}