சென்னை: யூடிப் பைக் ரேசர் டிடிஎஃப் வாசனுக்கு பைக் வைத்து சீன் போடத்தான் தெரியும் என்றும் முடிஞ்சா என் கூட ரேஸ் வர ரெடியா என்று சாவல் விட்டுள்ளார் அலிஷா அப்துல்லா.
யார் இந்த அலிஷா தெரியுமா?
பைக் ரேஸர்தான் அலிஷா அப்துல்லா. இவரது தந்தையும் ஒரு ரேசர்தான். தந்தை வழியில் இவரும் ரேசரானார். 9 வயதிலிருந்தே கார்ட் எனப்படும் உள்ளரங்க ரேசிங் கலந்துகொண்டு வருபவர். தனது முதல் வெற்றியை 11 வயதில் பெற்றார். ரேசிங்கில் இந்தியாவிலேயே சாம்பியன் பட்டம் வென்ற முதல் பெண் அலிஷாதான்.
இவர் ரேசர் என்பதுடன் நில்லாமல் ஒரு நடிகையாகவும், பாஜக கட்சியிலும் உள்ளார். நடிகர் அஜித் குடும்பமும் இவரது குடும்பமும் மிகவும் நெருக்கமானவர்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டு கையை உடைத்துக் கொண்டு தற்போது லைசென்ஸையும் பறிகொடுத்துள்ள டிடிஎப் வாசன் குறித்துப் பேசியுள்ளார் அலிஷா அப்துல்லா.
இதுகுறித்து கலாட்டா சேனலுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், டிடிஎப் வாசன் பைக் வைத்துக்கொண்டு சீன் தான் போட முடியும். ரேஸ் ஓட்ட முடியாது. நான் அவருக்கு ஓப்பனாக சேலஞ்ச் விடுகிறேன். என்னோடு ரேஸ் வர அவர் ரெடியா. நாங்கள் ப்ரொபஷனல் ரேசர்.
நாங்க மிகவும் கஷ்டப்பட்டு உழைக்கிறோம். நாங்கள் பல விஷயத்தை தியாகம் செய்கிறோம். ரேசிங் என்பது எங்கள் ரத்தம் போன்றது. அவரை எங்களுடன் ஒப்பிடாதீர்கள். அவர் ஒரு என்டர்டைனர். அவர் ஒரு ஜோக்கர். அதனால் ஒரு விளையாட்டு வீரரையும் ஒரு ஜோக்கரையும் ஒப்பிடாதீர்கள்" என்று கூறியுள்ளார்.
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}