சென்னை: அதிமுக உடனான கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை, சில பேச்சுகள் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறதே தவிர, கூட்டணி பலமாகவே உள்ளது என்று பாஜக தேசிய தலைமை விளக்கம் அளித்துள்ளது.
சென்ற தேர்தலின் போது அதிமுகவும் பாஜகவும் கூட்டணியில் தேர்தலை எதிர்கொண்டன. அதனையடுத்து அதிமுக முன்னாள் தலைவர்களை அண்ணாமலை தரக்குறைவாக பேசியதனால், இனிமேல் பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சிற்கே இடம் கிடையாது என்று திட்டவட்டமாக அதிமுக பொதுச்செயலார் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து வந்தார். அதுமட்டுமின்றி அண்ணாமலை இருக்கும் வரை கூட்டணி கிடையாது என்றும் தெரிவித்து வந்தார்.

இதனையடுத்து, பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை மாற்றப்பட்டு, தமிழக பாஜக தலைவராக நயினார் நகேந்திரன் பதவியேற்றார். அவர் பதவியேற்ற பின்னர் அதிமுக-பாஜக கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியாகியது. இந்தநிலையில் அதிமுக பாஜக கூட்டணி அமைத்து வெற்றி பெற்றால் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் நடைபெறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறியதாக செய்தியாளர்கள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி தனித்து தான் ஆட்சி அமைப்போம். கூட்டணி ஆட்சி இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
இந்நிலையில், நெல்லையில் தமிழகத்தின் அடுத்த முதல்வர் நயினார் நாகேந்திரன் என்று போஸ்டர் ஓட்டப்பட்டிருந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அதிமுக பாஜக இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் பரவின. இது அதிமுக மற்றும் பாஜக தரப்பில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதற்கு பாஜக தேசிய தலைமை விளக்கம் அளித்துள்ளது. அதில், அதிமுக பாஜக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை. சில பேச்சுக்கள் தவராக புரிந்துகொள்ளப்படுகிறதே தவிர கூட்டணி பலமாக தான் உள்ளது. 2026 சட்டசபை தேர்தலுக்கான வியூகம் அமைக்கும் பணியில் தற்போது தீவிரம் காட்டி வருகிறோம் என்று பாஜக தேசிய தலைமை விளக்கம் அளித்துள்ளது.
100 நாள் வேலை திட்டம் பெயர் மாற்றம்... டிசம்பர் 18ம் தேதி காங்கிரஸ் போராட்டம்: செல்வப்பெருந்தகை
எஸ்ஐஆர் பணிகள் மூலம் தமிழ்நாட்டில் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு
Political Maturity on cards?.. கே.ஏ.செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் பயணிக்குமா தவெக?
ஈரோடு விஜய் பிரச்சாரம்.. ஏகப்பட்ட நிபந்தனைகள்.. கடைப்பிடிப்போம் என பத்திரம் கொடுத்த தவெக!
மார்கழி மாதம் .. அணிவகுத்து நிற்கும் முக்கிய வழிபாடுகள்!
வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோவிலில்.. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை வழிபாடு
மாசமோ மார்கழி மாசம்.. வாசலில் கலர் கலர் கோலம்.. தினம் ஒரு கோலம்!
தொந்தி மாமா வந்தாராம்.. தொப்பியை தலையில் போட்டாராம்!
மாதங்களில் மார்கழி.. Ode to the Auspicious Marghazi Month!
{{comments.comment}}