சென்னை: திமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், இந்தியாவின் பெருமையை உலக அளவில் உயர்த்தி பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளவர் பிரதமர் மோடி. தமிழகத்திற்கு பாக்கியில்லாமல் நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. ஜி.எஸ்.டி இல்லாமல் தமிழகத்திற்கு ரூ.10 லட்சம் கோடி மத்திய அரசு வழங்கியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள 63 மொழிகளில் திருக்குறம் மொழி பெயர்க்கப்ட்டுள்ளது. பிரதமர் மோடி ஆண்டுதோறும் காசியிலும், குஜராத்திலும் தமிழ் சங்கமம் நடத்துவது தமிழர்களுக்கு மிகப்பெரிய பெருமை.

நிறைய பேர் பாஜக கூட்டணிக்கு வருவார்கள். இதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. 2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி தான் அமையும். 2026ல் தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமையும். கீழடிக்கு நான் நேரில் சென்று ஆய்வு நடத்தி, உதவி தேவைப்பட்டால் மத்திய அரசிடம் வலியுறுத்துவேன். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அதைப்பற்றி இப்போது சொல்ல முடியாது என்று தெரிவித்துள்ளார்.
Attention, Dear ’80s Trend Mongers! .. ரெட்ரோ மோகம் vs AI-ன் தாக்கம் பற்றி தெரிஞ்சுக்குங்க!
Short Story: "வெந்நீர் கொடுப்பாளா காவேரிக்கரையில?"
போதை உன்னை தொட்டவுடன் போற இடம் மறந்ததடா.... போதை விழிப்புணர்வுக் கவிதை!
Solomon Pappaiah: தமிழின் இனிமையை தன் நாவால் உலகறியச் செய்தவர்.. சாலமன் பாப்பையா!
வழிகாட்டி தேவதை.. ஒரு நிமிடக் கதை (16)
கடைசி வரை மூக்கு கண்ணாடியே கிடையாது.. ஸ்ரீ உ.வே. குப்புசாமி அய்யங்கார்!
பெருநம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்.. குலச்சிறை நாயனார் !
தமிழுக்கு ஓர் இழப்பு!
ரீல்ஸ் மோகம்!
{{comments.comment}}