டில்லி : நடந்து முடிந்த அருணாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் 2024 ல் பாஜக கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. இதனை பாஜகக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அருணாச்சல பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 60 சட்டசபை தொகுதிகளில் 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் போட்டியின்றி ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு விட்டனர். மீதமுள்ள 50 தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் இன்று (ஜூன் 02) காலை 6 மணி முதல் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுவரை வெளியிடப்பட்ட தேர்தல் முடிவுகளின் படி பாஜக 30 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் 15 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது. அதே சமயம் எதிர்க்கட்சியான என்பிபி., 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று, 3 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது. 2019ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பாஜக 41 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது குறிப்பிடத்தக்கது.
சிக்கிம்.. எதிர்க்கட்சிக்கு ஒன்னே ஒன்னு.. மிச்ச 31 இடங்களையும் வெல்லும் ஆளும் எஸ்கேஎம்!
இந்த முறை கூடுதல் இடங்களில் பாஜக வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளதால் இந்த பிரம்மாண்ட வெற்றியை அக்கட்சி தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
இந்த வாழ்க்கை ஒரு கனவா?
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்
பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு
2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு
Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்
மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை
காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு
{{comments.comment}}