கேங்டாக்: சிக்கிம் மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தல் 2024 ல் ஆளும் எஸ்கேஎம் எனப்படும் சிக்கிம் கிரந்திகாரி மோட்சா கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.
சிக்கிம் மாநிலத்தில் லோக்சபா தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தலும் நடத்தப்பட்டது. இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 32 தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் ஆளும் சிக்கிம் கிரந்திகாரி மோட்சா கட்சிக்கும், சிக்கிம் ஜனநாயக கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. பாஜக, காங்கிரஸ் கட்சிகளும் இதில் தங்களின் சார்பில் வேட்பாளர்களை நிறுத்தி இருந்தன.
ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக நடத்தப்பட்ட சிக்கிம் சட்டசபை தேர்தலில் மொத்தம் 79.88 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகி இருந்தன. பலத்த பாதுகாப்புகளுடன் காலை 6 மணி துவங்கி ஓட்டுக்கள் எண்ணப்பட்டு வந்தன.

இந்த தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் ஜூன் 02ம் தேதியான இன்று எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆளும் சிக்கிம் கிரந்திகாரி மோட்சா கட்சி 16 இடங்களில் வென்றது, 15 இடங்களில் முன்னிலையில் உள்ளது. மீதமுள்ள ஒரு இடத்தில் மட்டுமே எதிர்க்கட்சியான எஸ்டிஎஃப் கட்சி வெல்கிறது. சிக்கிமில் ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 17 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் 31 இடங்களை அள்ளுகிறது எஸ்கேஎம் கட்சி. எதிர்க்கட்சி வரிசையில் ஒரே ஒரு உறுப்பினர் மட்டுமே சட்டசபையில் நுழையவுள்ளார்.
அருணாச்சல் பிரதேசத்தில்.. அபார வெற்றி.. மீண்டும் ஆட்சியை பிடித்தது பாஜக!
சிக்கிம் முதல்வரும், சிக்கிம் கிரந்திகாரி மோட்சா கட்சியின் நிறுவன தலைவருமான பிரேம் சிங் தமாங் அதிக ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 56 வயதாகும் பிரேம் சிங், இரண்டாவது முறையாக மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளார். இவர் இதற்கு முன் 5 முறை சிக்கிம் முதல்வராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேகதாது அணை விவகாரம்: கர்நாடகா செல்ல முடிவு செய்தது ஏன்? முதல்வர் விஜய் சட்டசபையில் விளக்கம்
சபாஷ் சரியான போட்டி.. தமிழ்நாடு சட்டசபையில் அனல் பறந்த காரசார விவாதங்கள்
முதல்வர் விஜய் மீதான விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் மனைவி சங்கீதா
மேகதாதுவுக்காக முதலில் கூட்டம் போடுங்க.. எம்.பிக்கள் கூட்டத்துக்கு வர்றோம்.. திமுக நிபந்தனை
முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் ரத்து
Whatsapp Groups: வாட்ஸ்அப் ஃபேமிலி குரூப் அட்டகாசங்கள்.. ஒரு 'நோ எக்சிட்' காமெடி த்ரில்லர்!
டாஸ்மாக் கடைகளில் கூடுதல் தொகை வசூலித்தால் உடனே FIR: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி
வெள்ளிக்கிழமை இரவு.. "நான் தான் கெத்து!".. Weekend புத்துணர்ச்சி கலாட்டாக்கள்!
தமிழ்நாடு மதிப்பு கூட்டு வரி சட்ட திருத்த முன்வடிவு சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேறியது
{{comments.comment}}