மாண்டி: தனது தொகுதி மக்கள் தன்னை சந்திக்க வேண்டும் என்றால் ஆதார் கார்ட் கட்டாயம் கொண்டு வர வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளார் பாஜக எம்பி கங்கனா ரனாவத்.
மாடலிங் துறையில் புகழ்பெற்ற கங்கனா ரனாவத் பாலிவுட்டில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த கேங்ஸ்டர் படம் மூலம் அறிமுகமானவர். நடித்த முதல் படத்திலேயே சிறந்த நடிகை என்ற பிலிம்பேர் விருதையும் தட்டிச் சென்றார்.

இந்த வெற்றியை தொடர்ந்து 2008 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் உருவான தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் ஹிந்தியில் இயக்குனராகவும் அவதாரம் எடுத்த கங்கனா ரனாவத், மணிக்கர்னிகா என்ற திரைப்படத்தை தமிழிலும் டப் செய்து வெளியிட்டார். இதனை அடுத்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சுயசரிதை திரைப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடித்தார் கங்கனா. சந்திரமுகி பார்ட்2 படத்திலும் நடித்திருந்தார்.
இப்படியாக தமிழிலும் இந்தியிலும் மாறி மாறி நடித்து குறுகிய காலத்திலேயே பல விருதுகளைப் பெற்ற கங்கனா ரனாவத். அவ்வப்போது அரசியல் கருத்துக்களை வெளிப்படையாக கூறுவதன் மூலம் பல்வேறு சர்ச்சை பேச்சுகளிலும் சிக்கியவர். தொடர்ந்து சோசியல் மீடியாவிலும் சர்ச்சை கருத்துக்களை பதிவிட்டு பரபரப்பை கிளப்பி விடுவதிலும் பஞ்சமில்லாதவர். இந்த சர்ச்சை கருத்துக்கள் தொடர்பாக இவர் மீது பல புகார்களும் எழுந்தன.
இந்த நிலையில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் இமாச்சலப் பிரதேசத்தின் மாண்டி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளரை விட 74 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நடிகையாக இருந்தவர் தற்போது எம்பி ஆக பதவி வகித்து வருகிறார்.
இந்த நிலையில் பாஜக எம்பி கங்கனா ரனாவத் தனது தொகுதி மக்களுக்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளார். அதில் தொகுதி மக்கள் தன்னை சந்திக்க வேண்டும் என்றால் கட்டாயம் ஆதார் கார்டை கொண்டு வர வேண்டும். மேலும் தன்னை சந்திப்பதற்கான காரணத்தை காகிதத்தில் எழுதிக் கொண்டு வர வேண்டும். எனது தொகுதி மக்களை தவிர வேறு யாரையும் நான் சந்திக்க விரும்பவில்லை என கூறியுள்ளார். இது விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}