சென்னை: தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 20 தொகுதிகளுக்கும் மிகாத இடங்களில் மட்டுமே போட்டியிடும் என்றும், அதற்குப் பதிலாக அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) ஒருமைப்பாட்டை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தும் என்றும் பாஜக தேசிய பொதுச் செயலாளர் (அமைப்பு) பி.எல். சந்தோஷ் கட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைமையகமான 'கமலாலயத்தில்' நடைபெற்ற தொகுதிப் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர், 234 இடங்களைக் கொண்ட தமிழக சட்டப்பேரவையில் பாஜக சுமார் 45 முதல் 50 இடங்கள் வரை போட்டியிட வாய்ப்புள்ளதாகக் கூறியதாகத் தெரிகிறது. கடந்த 2021 தேர்தலில், அதிமுக கூட்டணியில் பாஜக 20 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

கூட்டணியின் வெற்றி வாய்ப்புகளை அதிகப்படுத்த அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுமாறு அவர் கட்சித் தொண்டர்களை வலியுறுத்தினார். "அதிக இடங்களைக் கேட்பதை விட, கூட்டணி தர்மத்தைப் பேணுவதே முக்கியம்" என கூட்டத்தில் கலந்து கொண்ட மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
மேலும், வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவோர் தங்கள் தொகுதிகளில் 70 சதவீத தேர்தல் பணிகளைச் செய்ய வேண்டும் என்றும், போட்டியிடாத தொண்டர்கள் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக 30 சதவீத உழைப்பை நல்க வேண்டும் என்றும் சந்தோஷ் அறிவுறுத்தினார். தேர்தல் ஏப்ரல் முதல் வாரத்திலேயே, முதற்கட்டமாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் அவர் சூசகமாகத் தெரிவித்தார்.
கேசவ விநாயகம் பதவி விலக வாய்ப்பு:
மற்றொரு முக்கிய நிகழ்வாக, பாஜக மாநில பொதுச் செயலாளர் (அமைப்பு) கேசவ விநாயகத்தை பதவியில் இருந்து விலகுமாறு கட்சித் தலைமை கேட்டுக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கட்சி மேலிடத்திடம் முன் வைத்த சில புகார்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தேர்தல் முடியும் வரை இந்தப் பதவி காலியாகவே இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கேசவ விநாயகம் 2015 முதல் இந்தப் பதவியில் இருந்து வருகிறார்.
அதிக இடங்களில் போட்டியிட்டு சொற்ப இடங்களை மட்டுமே கைப்பற்றுவதை விட, குறைவான தொகுதிகளில் போட்டியிட்டாலும் அவை அனைத்திலும் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என பாஜக நினைக்கிறதாம். அதனால் அதிமுக தலைமை ஒதுக்கிய 25 தொகுதிகளையும் 20 ஆக குறைத்துக் கொண்ட, அதிக கூட்டணி கட்சிகளை உள்ளே இழுக்க பாஜக திட்டமிடுகிறதாம். அதனால் பாஜக.,விற்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை மட்டுமே கேட்டு பெற திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. பாஜக திடீரென சீட்டுக்களை குறைத்துக் கொண்டுள்ளதால் ராமதாஸ் பாமக, தேமுதிக போன்ற கட்சிகள் விரைவில் என்டிஏ கூட்டணிக்குள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவது கட்டாயம்.. சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்
சட்டசபையில் கலகல.. முதல்வர் விஜய்யை குலுங்கிக் குலுங்கி சிரிக்க வைத்த எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!
தமிழ்த்தாய் வாழ்த்தை கடைசியில் பாட வற்புறுத்தவில்லை - கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
தமிழக அரசின் மாநிலக் குழுவில் அர்ச்சனா கல்பாத்தி, பாடகர் வேல்முருகன் பெயர்கள்
மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்.. கை, கால்களை சுத்தமாக கழுவ செவிலியர்கள் அறிவுரை!
சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை...வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி
சூப்பர் ஆண்டி.. பொறணி பேசியே 2 வீடு வாங்கி செட்டிலான கொலம்பியா மிரியம்!
நோட்டிஃபிகேஷன் மனிதர்கள் – போன் வைப்ரேட் ஆனா மட்டும் போதாது மச்சா!
மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து என்று மத்திய அரசு சொல்லவே இல்லை.. டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்
{{comments.comment}}