சென்னை: எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப் பயணத்தின் போது அனைத்து இடங்களிலும் பாஜக கலந்துகொள்ளும். இனி வரும் நாட்களில் அதிமு் நடத்தும் போராட்டங்களில் பாஜக இணைந்து செயல்படும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளா
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரி இல்லை. முதலமைச்சர் கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை. சில தலைமைச் செயலகத்திலிருந்து காவல்துறையை கட்டுப்படுத்துகிறார்கள். காவலாளி அஜித் குமார் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளார். அவரை தனிப்படை எப்படி விசாரித்தது. தலைமைச் செயலகத்தில் யாரை அவர்கள் தொடர்பு கொண்டார்கள். அங்கிருந்து போலீஸாருக்கு உத்தரவு பிறப்பித்தது யார் என்பதை முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும்.
2011 ஆம் ஆண்டில் நிகிதா திருமண மோசடி செய்து உள்ளார். இந்த விஷயத்தில் முதலமைச்சர் சாரி என்று கூறிவிட்டுச் செல்ல முடியாது. அவர் இது பற்றி விரிவாக விளக்கத்தை தர வேண்டும். சிபிஐ விசாரணையை தொடங்க வேண்டும். சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் இதுவரை குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. ஆனால், அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வழக்கில் ஐந்து மாதத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அரசு பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் ஆயினும் சாத்தான்குளம் வழக்கை தாமதப்படுத்துவது ஏன் எல்லா வழக்குகளையும் ஒரே மாதிரியாக விசாரிக்க வேண்டும் நுங்கம்பாக்கம் சிறுமி பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில் காவல்துறை பின்னணி இருப்பதாக தகவல் வருகிறது போலிஸ் காவலில் மரணம் என்று போலீசார் விசாரணை கைதிகளை படுகொலை செய்கிறார்கள் அதற்கு முதலமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப் பயண தொடக்க விழாவில் நான் பங்கேற்கிறேன்.
மற்ற மாவட்டங்களில் பாஜக நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள். பாமகவில் ஏற்பட்ட பிளவுக்கு நாங்கள் காரணம் அல்ல. கூட்டணி தொடர்பாக விரைவில் பாமகவில் இருந்து நல்ல செய்தி வரும். எங்கள் கூட்டணியில் விஜய் சேர்வாரா என்பதை பொறுத்திருந்து பாருங்கள். தேர்தலுக்கு இன்னும் நிறைய நாட்கள் உள்ளது. நல்லதே நடக்கும் என்று தெரிவித்துள்ளார்.
வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அனைவரும் கம்பி எண்ணப்போவது உறுதி: எடப்பாடி பழனிச்சாமி
அப்பா வின் ஆட்சியில் தொடர்ந்து காணாமல் போகும் அப்பாவி குழந்தைகள்: நயினார் நாகேந்திரன்
புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?
என் திரை வாழ்வை சீர்குலைக்க நடந்த சதி செயல்: நடிகர் திலீப் பேட்டி
ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு
பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற திருகொண்டீஸ்வரம் .. பசுபதீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர யாகம்
எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?
{{comments.comment}}