சண்டிகர்: சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ஹர்ப்ரீத் கெளர் பாப்லா 19 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளின் ஆதரவுடன் போட்டியிட்ட வேட்பாளருக்கு 17 வாக்குகளே கிடைத்ததால் அவர் தோல்வியைத் தழுவினார்.
சண்டிகர் மாநகராட்சி மேயர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தல் ரகசிய வாக்கெடுப்பு மூலம் நடைபெற்றது. நியமன கவுன்சிலர் ராம்நீக் சிங் பேடி தேர்தல் அதிகாரியாக செயல்பட்டார். ஓய்வு பெற்ற பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயஸ்ரீ தாக்கூர் கண்காணிப்பாளராக செயல்பட்டார். உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி இந்த தேர்தல் நடைபெற்றது.

இன்று காலை 11.20 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி பிற்பகல் 12.19 மணிக்கு முடிவுற்றது. இதையடுத்து வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் பாஜக வேட்பாளருக்கு 19 வாக்குகளும், ஆம் ஆத்மி காங்கிரஸ் கூட்டணி வேட்பாளருக்கு 17 வாக்குகளும் கிடைத்தன. காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பிரேமலதா போட்டியிட்டிருந்தார்.
சண்டிகர் மாநகராட்சியில் 35 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் ஆம் ஆத்மி கட்சிக்கு 13 பேர் உள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு 6 பேரும் உள்ளனர். மறுபக்கம் பாஜகவுக்கு 16 கவுன்சிலர்கள் உள்ளனர். இவர்கள் தவிர சண்டிகர் எம்.பியும் வாக்களிக்கலாம். அவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். அந்த அடிப்படையில் பார்த்தால் காங்கிரஸ் கூட்டணிக்கு 20 வாக்குகளும் பாஜகவுக்கு 16 வாக்குகளும்தான் வந்திருக்க வேண்டும். அதாவது ஆம் ஆத்மியின் பிரேமலதாதான் ஜெயித்திருக்க வேண்டும். ஆனால் நிலைமை தலைகீழாக மாறிப் போய் விட்டது.
சில நாட்களுக்கு முன்புதான் காங்கிரஸ் கவுன்சிலர் குர்பக்ஸ் ராவத் பாஜகவுக்குத் தாவி வந்தார். இவர் தவிர கூடுதலாக கிடைத்த வாக்குகள் கட்சி மாறி வந்தவையாகும். தேர்தல் முடிவால் காங்கிரஸ் ஆம் ஆத்மி கட்சிகள் கடும் அதிருப்தியும், அதிர்ச்சியும் அடைந்துள்ளன.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மீண்டும் ஏற்றம் கண்ட தங்கம், வெள்ளி விலை... சவரனுக்கு ரூ.320 உயர்வு!
கோவை விமான நிலையம் அருகே அதிர்ச்சி... மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை!
இல்லத்தரசி!
சோமவார பிரதோஷம்.. சிவபெருமானுக்கான விரதங்களிலேயே மிகவும் சிறந்தது!
தெலங்கானாவில் விபரீதம்.. அரசுப் பேருந்துடன் ஜல்லி லாரி மோதி.. பயங்கர விபத்து
வடக்கு ஆப்கானிஸ்தானை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. பெரும் சேதம் எனத் தகவல்
கடற்பாசி ஜெல்லி.. சாப்பிட்டிருக்கீங்களா.. சூப்பர் டேஸ்ட்டி.. சுப்ரீம் ஸ்வீட்டுங்க!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 03, 2025... இன்று நன்மைகள் தேடி வரும் ராசிகள்
அம்மாவை அதிகமாக மௌனங்களோடு பேச விடாதீர்கள்!
{{comments.comment}}