சட்லெஜ் நதியில் மாயமான.. சைதை துரைசாமி மகன் வெற்றி துரைசாமியின் உடல் மீட்கப்பட்டது!

Feb 12, 2024,06:58 PM IST

சிம்லா: இமாச்சல் பிரதேச மாநிலத்தில் விபத்துக்குள்ளாக்கி ஆற்றில் மாயமான வெற்றி துரைசாமியின் இறந்த உடல் மீட்கப்பட்டுள்ளது.


கடந்த பிப்ரவரி 4ம் தேதி  இமாச்சல் பிரதேச மாநிலம், கஷாஹ் நலா என்ற இடத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த வெற்றி துரைசாமி பயணித்த கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் பலியானார். வெற்றி துரைசாமியின் உதவியாளர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டார். சட்லெஜ் ஆற்றில் போய் விழுந்த காரில் இருந்த வெற்றி என்ன ஆனார் என்பது தெரியவில்லை.




அவரைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வந்து. கடற்படையினரும் இதில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த நிலையில் விபத்து நடந்த இடத்திலிருந்து கிட்டத்தட்ட 2 கிலோமீட்டர் தொலைவில் ஒரு இடத்தில் சிக்கியிருந்த வெற்றி துரைசாமியின் இறந்த உடல் தற்போது மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


வெற்றி துரைசாமியின் உடல் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வெற்றியின் உடல் கிடைத்துள்ள தகவல் அவரது குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெற்றியின் தந்தையான முன்னாள் சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி இமாச்சல் பிரதேசம் விரைந்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.


திரைப்பட இயக்குநராகவும் இருந்தவர் வெற்றி துரைசாமி. ஒரு படம் இயக்கியுள்ளார். நடிகர் அஜீத்தின் நட்பு வட்டாரத்திலும் அவர் இருந்து வந்தார். எப்படியாவது வெற்றி உயிருடன் கண்டுபிடிக்கப்படுவார் என்ற நம்பிக்கை அவரது குடும்பத்தினருக்கு இருந்தது. ஆனால் தற்போது அவரது  உடல் மீட்கப்பட்டிருப்பது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?

news

தொடர் புதிய உச்சத்தில் தங்கம் விலை... கிடுகிடு வென உயர்ந்து சவரன் ரூ.81,000த்தை கடந்தது!

news

நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!

news

புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி

news

கடலும் கடலின் ஒரு துளியும்!

news

இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது

news

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது

அதிகம் பார்க்கும் செய்திகள்