மும்பை: சிங்கம் போன்ற படங்களில் சித்தரிக்கப்படும் போலீஸ் அதிகாரி கேரக்டர்கள் சமூகத்துக்கு தவறான செய்தியைக் கொண்டு செல்கின்றன. இவை ஆபத்தானவை என்று பாம்பே ஹைகோர்ட் நீதிபதி கெளதம் படேல் கூறியுள்ளார்.
ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற படம்தான் சிங்கம். இந்தப் படம் இந்தியில் அஜய் தேவ்கன் நடிப்பில், ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் ரீமேக்கும் செய்யப்பட்டு அங்கும் வெற்றி பெற்றது. தமிழில் சிங்கம் 3 பாகமாக வந்தது.
இந்த நிலையில் சிங்கம் படத்தில் சித்தரிக்கப்படும் போலீஸ் அதிகாரி கேரக்டர் அபாயகரமானது என்று பாம்பே ஹைகோர்ட் நீதிபதி கெளதம் படேல் கூறியுள்ளார். இதுகுறித்து மும்பையில் நடந்த போலீஸ் நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில்,
சட்டத்தின் தாமதம் மக்களை அயர்ச்சி அடைய வைக்கிறது. அதேசமயம் யாரும் சட்டத்தை கையில் எடுத்து விடவும் கூடாது. போலீஸ் சட்டங்களில் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும். அதற்கு முன்பு அனைவருமே சீர்திருந்த வேண்டும். அனைவரும் சீர்திருந்தினால்தான் அனைத்தும் சீர்திருந்த முடியும்.
திரைப்படங்களில் போலீஸ் அதிகாரிகள் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு அவர்களே தீர்ப்பளிக்கும்போது, தண்டிக்கும்போது அதை மக்கள் ரசிக்கிறார்கள். சூப்பர் காப் என்று புகழ்கிறார்கள்.. கொண்டாடுகிறார்கள்.. கோர்ட்டுகளில் நீதி கிடைக்க ஏற்படும் தாமதங்களே மக்களின் இந்த மனோபாவத்திற்குக் காரணம்.
ஒரு பாலியல் பலாத்கார குற்றவாளியை போலீஸார் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லும்போது அதை மக்கள் சரி என்று சொல்கிறார்கள். கொண்டாடுகிறார்கள். நீதி கிடைத்து விட்டதாக கொண்டாடுகிறார்கள்.. அது உண்மையா என்றால் இல்லை என்பதே எனது பதில்.
திரைப்படங்களில் நீதிபதிகளை கோமாளித்தனமாக சித்தரிக்கிறார்கள். தடித்த கண்ணாடி போட்டுக் கொண்டு, தடித்த உருவத்துடன், காணப்படுபவராக அவர்களை காட்டுகிறார்கள். அதேசமயம், சூப்பர் ஹீரோக்களாக காட்டப்படும் போலீஸ் கேரக்டர்களை மிகவும் ஸ்டைலிஷாக காட்டுகிறார்கள். குறிப்பாக சிங்கம் படத்தில், பிரகாஷ் ராஜ் என்ற அரசியல்வாதிக்கு எதிராக மொத்த காவல்துறையும் சட்டத்திற்கு விரோதமாக நடக்கும் காட்சி காட்டப்படுகிறது. இது எவ்வளவு தவறான செய்தியை கொண்டு செல்கிறது. இது அபாயகரமானது, சமூகத்திற்கு ஆபத்தானது என்றார் நீதிபதி படேல்.
IPl 2025.. எல்லை தாண்டி எகிறி அடிக்கும் வீரர்கள்.. ஐபிஎல்லில் இதுவரை குவிக்கப்பட்ட Super சிக்சர்கள்!
துபாய், சிங்கப்பூர், கொழும்பு வழியாக.. பாகிஸ்தானுக்கு தங்கு தடையின்றி செல்லும்.. இந்தியப் பொருட்கள்!
பஹல்காம் தாக்குதல் .. மத்திய அரசு, ராணுவம் குறித்து விமர்சனம்.. நாடு முழுவதும் 19 பேர் கைது
விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு.. முதல் முறையாக.. தேமுதிக பொதுக்குழு கூட்டம்.. 30ம் தேதி!
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
{{comments.comment}}