"லூஸ் டாக் விட்ட பாஸ்".. ரூ. 37 லட்சம் ஜாக்பாட் அடிச்ச பெண் ஊழியர்!

Oct 02, 2023,01:19 PM IST

கிளாஸ்கோ: ஸ்காட்லாந்தில், தனது பெண் ஊழியரின் மெனோபாஸ் குறித்து கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கி, தற்போது அதற்கு இழப்பீடாக ரூ. 37 லடசம் பணத்தைக் கொடுத்துள்ளார் ஒரு நிறுவனத்தின் உயர் அதிகாரி.


அந்தப் பெண் ஊழியர் சரியாக வேலை பார்ப்பதில்லை என்று கோபமடைந்த பாஸ், அடிக்கடி அவரிடம் "எல்லாத்துக்கும் மெனோபாஸ்தான் காரணம் என்று சொல்லாதீங்க" என்று கடிந்துள்ளார். அவரது இந்த கருத்தால் அவமானமடைந்ததாக உணர்ந்த அந்தப் பெண் ஊழியர், பாஸ் மீது நஷ்டஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்து விட்டார்.




இந்த வழக்கை விசாரித்த கோர்ட் தற்போது அந்தப் பெண்ணுக்கு, அவரது உயரதிகாரி ரூ. 37 லட்சம் இழப்பீடு தர உத்தரவிட்டது. ஒரே ஒரு வார்த்தையை விட்டதற்காக இப்போது தேவையில்லாமல் ரூ. 37 லட்சம் பணத்தைக் கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் அந்த பாஸ்.


அந்தப் பெண்ணின் பெயர் கரேன் பர்குஹார்சன். 49 வயதாகும் இவர் 1995ம் ஆண்டிலிருந்து திஸ்டில் மெரைன் என்ற என்ஜீனியரிங் நிறுவனத்தில் வேலை  பார்த்து வந்தார். பின்னர் வேலையை விட்டு அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டு விட்டார். வேலையை விட்டு விலகும்போது அவர் மாதம் 38,000 பவுண்டு சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார்.


இவரது மேலதிகாரி தான் ஜிம் கிளார்க். அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தார். கரேனுக்கு மெனோபாஸ் காலம் என்பதால் அவருக்கு அடிக்கடி உடல் நல பாதிப்பு ஏற்பட்டு வந்தது. இதனால் அடிக்கடி விடுமுறை அல்லது வேலையில் பிரச்சினை வந்து கொண்டே இருந்தது. இதுகுறித்து ஜிம் கிளார்க்குக்கு அவர் விளக்கியுள்ளார். ஆனால் அதை அவர் கண்டு கொள்ளவில்லை. மாறாக தொடர்ந்து கடிந்து கொண்டே வந்தார். மேலும் எதற்கெடுத்தாலும் மெனோபாஸைக் காரணம் காட்டாதீங்க என்றும் கோபமாக கூறியுள்ளர்.


மேலும் அவரை வேலையை விட்டும் நீக்கியுள்ளனர். இதனால் கோபமடைந்த கரேன் 72 வயதான ஜிம் கிளார்க் மீது கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். தன்னை அவமரியாதையாக பேசிய ஜிம் கிளார்க் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று அதில் அவர் கோரியிருந்தார்.


அவர் தொடர்ந்த வழக்கில், 27 வருடமாக இங்கு வேலை பார்த்து வந்தேன். என்னை குப்பை போல நடத்தி அவமானப்படுத்தி விட்டார் ஜிம் கிளார்க். என்னை அவமானப்படுத்தி விட்டார். எனது உடல் நலப் பிரச்சினையை இழிவாக விமர்சித்தார். பலமுறை அவமானப்படுத்தினார். அவரிடம் பலமுறை விளக்க முயன்றும் கூட அதை அவர் கேட்கத் தயாராக இல்லை.


என்னை மட்டுமல்லாமல், பிற ஊழியர்களையும் கூட அவர் அவமரியாதையாகத்தான் நடத்தினார். அவர்கள் காதுபட அவர்களை இழிவுபடுத்துவார் என்றார் அவர். இந்த நிறுவனத்தின் நிறுவனரும் ஜிம் கிளார்க்தான். 1970களில் இதை உருவாக்கினார். இந்த வழக்கை விசாரித்த கோர்ட், ஜிம் நடத்தையை கண்டித்து அவர் ரூ. 37 லட்சம் இழப்பீடு தர உத்தரவிட்டது.

சமீபத்திய செய்திகள்

news

எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

news

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க

news

விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

news

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

news

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்