டெல்லி: எதிர்க்கட்சியினர் தொடர் முழக்கத்தில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு அவைகளும் இன்று முழுமைக்கும் ஒத்திவைக்கப்பட்டன.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 20ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தின் இரு அவைகள் கூட்டத்தொடர் தொடங்கியது. அப்போது இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சியினர் அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம் உட்பட பல்வேறு விஷயங்களை முன் வைத்தனர். அதேபோல் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் தமிழக எம்பிகள் தொடர்ந்து கோஷம் எழுப்பினர்.
நாடாளுமன்றத்தின் லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஆகிய இரு அவைகளும் தொடங்கிய பிறகு எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமலில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு, மீண்டும் இரு அவைகளும் நவம்பர் 27ஆம் தேதி காலை 11 மணியளவில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று காலை 11 அளவில் நாடாளுமன்ற இரு அவைகளும் தொடங்கியது. அப்போது அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம், சம்பல் துப்பாக்கி சூடு உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தினர். இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் அளித்த 18 தீர்மானங்கள் தொடர்பான நோட்டீஸும் நிராகரிக்கப்பட்டது. தொடர்ந்து எதிர்க்கட்சியினர் முழக்கத்தில் ஈடுபட்டதால் மக்களவை மதியம் 12 மணி வரையிலும், மாநிலங்களவை 11:30 மணி வரையிலும் ஒத்தி வைக்கப்பட்டது .
அதன் பின்னர் இரு அவைகளும் கூடிய பிறகும் கூட முழக்கங்கள், அமளிகள் ஓயவில்லை. இதையடுத்து இரு அவைகளும் இன்று நாள் முழுமைக்கும் ஒத்திவைக்கப்பட்டன.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?
வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!
டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் காலமானார்
தோசையம்மா தோசை.. ஹெல்த்தியான தோசை.. சுட்டுச் சுட்டுச் சாப்பிடுங்க.. சூப்பராக வாழுங்க!
அரங்கன் யாவுமே அறிந்தவனே!
அவரது நடிப்பாற்றல் பல தலைமுறைகளைக் கவர்ந்துள்ளது: ரஜினிகாந்திற்கு பிரதமர் மோடி, முதல்வர் வாழ்த்து
தங்கம் விலையில் அதிரடி... இன்று மட்டும் சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு... புதிய உச்சத்தில் வெள்ளி விலை!
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு... அதிகாலையில் பனிமூட்டமும் இருக்குமாம் - IMD
{{comments.comment}}