King Maker Chandrababu Naidu: நாய்டுவுக்கு போன் போட்ட மோடி.. வலை வீச்சில் குதித்த காங்கிரஸ்!

Jun 04, 2024,03:41 PM IST

டில்லி :  பாஜக கூட்டணி அமோக வெற்றி நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் மத்தியில் பாஜக தான் ஆட்சி அமைக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்ய போகும் மிகப் பெரிய பவர் நிதிஷ்குமார் மற்றும் சந்திர பாபு நாயுவிடம் தான் உள்ளது.


மொத்தமுள்ள 543 லோக்சபா தொகுதிகளில் பாஜக மட்டும் 441 இடங்களில் போட்டியிட்டுள்ளது. மற்ற தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் 272 இடங்கள் தேவை. ஆனால் தற்போது வரை வெளியாகி உள்ள முன்னணி நிலவரத்தின் படி, பாஜக கூட்டணி 300க்கு உட்பட்ட இடங்களில் முன்னணியில் உள்ளது. இந்தியா கூட்டணி 233 இடங்களில் முன்னிலையில் உள்ளது. 




நிதீஷ்குமாரிடம் இப்போது 14 எம்பிக்கள் இருக்கிறார்கள். சந்திரபாபு நாயுடுவிடம் 16 பேர் உள்ளனர். இவர்கள் இருவரும் பின் வாங்கினால், பாஜகவால் ஆட்சியமைக்க முடியாமல் போகும். எனவே இவர்கள் இருவரும் பாஜகவுக்கு மிக மிக முக்கியமாகியுள்ளனர். இந்த இருவரும் கிங் மேக்கர்களாக உருவாகியிருப்பதால் இவர்களை பாஜகவால் பகைத்துக் கொள்ள முடியாது. இவர்களில் யாராவது ஒருவர் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகினால் கூட பாஜகவுக்கு அது சிக்கலாகி விடும்.


நிதிஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு இருவரும் இவரிடமும் உள்ள 30 எம்பி., இல்லை என்றால் பாஜக.,விற்கு பெரும்பான்மை கிடைக்காது. மத்தியில் ஆட்சி அமைக்கவும் முடியாது. ஒருவேளை இவர்கள் இந்தியா கூட்டணி பக்கம் தாவினால் உதிரி கட்சிகளை தங்கள் கூட்டணியில் இணைத்துக் கொண்டு இந்தியா கூட்டணி கூட மத்தியில் ஆட்சி அமைக்கும் நிலை ஏற்படலாம். அதனால் தற்போது மத்தியில் பாஜக ஆட்சி அமைப்பதும், அமைக்காமல் போவதும் நிதிஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு கைகளில் தான் உள்ளது. 


ஒருவேளை இந்த தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்தாலும், அடுத்த 5 ஆண்டுகள் பிரச்சனையின்றி பாஜக ஆட்சி நடத்த வேண்டும் என்றாலும் நிதிஷ்குமார் மற்றும் சந்திரபாபுவின் ஆதரவு தேவை. அதனால் இவர்கள் இருவரின் கட்சிகளுக்கும் கண்டிப்பாக மத்திய அமைச்சர் பதவி உறுதியாகி விட்டது. அவர்கள் விரும்பும் இலாக்காக்களை கேட்டு பெறுவதற்கும் கூட வாய்ப்பு உள்ளது.


இதை பாஜகவும் முன்பே உணர்ந்திருந்தது. இதனால்தான் நேற்று பிரதமர் நரேந்திர மோடி, நிதீஷ் குமாரை டெல்லிக்கு அழைத்துப் பேசினார். அவரிடம் கூட்டணியில் நீடிப்பது குறித்தும், முக்கியப் பதவிகள் குறித்தும் பேசப்பட்டதாக தெரிகிறது. நிதீஷ் குமார் மத்திய அமைச்சராக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்று, சந்திரபாபு நாயுடுவுடன் பிரதமர் மோடி போனில் பேசினார்.


மறுபக்கம் இந்தியா கூட்டணியும் நாயுடுவை வளைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. கர்நாடகத்தில் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கு ஸ்கிரிப்ட் எழுதிய துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், நாயுடுவுடன் போனில் பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இதனால் நாயுடுவுக்கு டிமாண்ட் கூடியுள்ளது. நாயுடு வெளியே வந்தால், கூடவே பவன் கல்யாணும் பாஜக வை விட்டு வெளியேறும் வாய்ப்புள்ளது. இருவரும் வெளியேறி வந்தால் நிச்சயம் பாஜகவால் ஆட்சியமைக்க முடியாமல் போகும் என்பதால் பரபரப்பு கூடியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்