லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் வாக்குச்சாவடி ஒன்றில் பாஜகவுக்கு 8 முறை வாக்களித்து பரபரப்பை ஏற்படுத்திய சிறுவனை பல்வேறு புகார்களுக்குப் பிறகு போலீஸார் கைது செய்துள்ளனர். சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடியில் மறு வாக்குப் பதிவு நடத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதில், 4 கட்ட வாக்குபதிவு நடந்து முடிந்த நிலையில், இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 4ம் கட்ட வாக்குப்பதிவின்போது உ.பி மாநிலத்தில் ஒரு முறைகேடு நடத்தது அம்பலமாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஃபரூக்காபாத் எனும் இடத்தில் கடந்த மே 13ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது அந்த வாக்குச்சாவடியில் ஒருவர் பாஜக வேட்பாளருக்கு ஒன்று அல்ல இரண்டு அல்ல, 8 முறை வாக்களித்து விட்டு அதனை வீடியோ வேறு எடுத்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதள பக்கங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 2.19 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவை உ.பி.முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தனது சமூக வலை தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனைத் தவறு என்று தேர்தல் ஆணையம் கருதினால் நிச்சயமாக ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பாஜக பூத் கமிட்டி லூட் கமிட்டியாகத் தான் இருக்கும் என்று அவர் கூறியிருந்தார். காங்கிரஸ் கட்சியும் தேர்தல் ஆணையத்திற்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியிரு்நதது. இந்த வீடியோவை பார்த்த மாநில தலைமை தேர்தல் அதிகாரி அவரது எக்ஸ் தளபக்கத்தில் அந்த வீடியோவின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலர் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட தேர்தல் அதகாரி வெளியிட்ட அறிக்கையில், 1950, 1951, 1989 மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் படி 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். வீடியோவின் அடிப்படையில் அந்த சிறுவனை போலீசார் கைது செய்தனர். தற்போது அந்த நபருக்கு வயது 17தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அவரது தந்தை பாஜகவைச் சேர்ந்தவராம். அவரது பெயர் அனில் சிங் தாக்கூர். இந்த சம்பவம் அப்பகுதி மட்டும் இன்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எப்படி அந்த நபரால், இந்தனை முறை வாக்களிக்க முடிந்தது. வாக்குச் சாவடி அதிகாரிகள் இந்த அளவுக்கு மெத்தனமாக இருந்தது எப்படி என்று பொதுமக்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் தொடர்புடைய சிறுவனின் தந்தை அனில் சிங் தாக்கூர் இதுகுறித்துக் கூறுகையில், தேர்தல் நாளன்று கட்சி ஏஜென்டுகள் எனது மகனைக் கூட்டிச் சென்றுள்ளனர். அவனுக்கு 17 வயதுதான் ஆகிறது. மாக் போலில் அவரை பங்கேற்க வைத்துள்னர். எனது மகனும் பலமுறை வாக்களித்துள்ளான். அந்த வீடியோவைத்தான் அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் தளத்தில் போட்டுள்ளார் என்று கூறியுள்ளார் என்று விளக்கியுள்ளார்.
9 மாவட்டங்களுக்கு இன்று கனமழையும்.. நெல்லைக்கு மிக கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் : வானிலை மையம் தகவல்!
திமுக ஆட்சியில் சென்னை ரவுடிகளின் சாம்ராஜ்யமாக மாறிவிட்டது: எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு!
சுகாதாரமற்ற குடிநீரை வழங்கி தமிழக மக்களைக் காவு வாங்கத் துடிக்கிறதா திமுக அரசு?: நயினார் நாகேந்திரன்
நெல் கொள்முதல் ஈரப்பத விகிதத்தை உயர்த்துக.. பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
காகிதக் குடுவைகளில் மது விற்கும் திட்டம்.. குழந்தைகளை கெடுக்க நினைத்த திமுக அரசு: அன்புமணி ராமதாஸ்!
கோவை வரும் பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி!
சார் படிவத்தை நிரப்புவதில் குழப்பமா.. கவலைப்படாதீங்க.. சென்னை மாநகராட்சி சிறப்பு ஏற்பாடு
வாட்ஸ் ஆப்புக்கு வந்துருச்சு ஆப்பு.. எலான் மஸ்கின் X-சாட் தான் டாப்பாமே.. மக்கா!
SIR பணிகளைப் புறக்கணித்து.. போராட்டத்தில் குதித்த வருவாய்த்துறை ஊழியர்கள்
{{comments.comment}}