சென்னை: தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் முதல் முறையாக சென்னை மாநகராட்சியில் இருந்து தொடக்கம். சென்னையை தொடர்ந்து மற்ற நகர்புறங்களிலும் காலை உணவு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்கு பின்னர் நிதியமைச்சர் தங்கம் தென்னரம் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில்,
தூய்மை பணியாளர்களின் நலனை காப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. தூய்மை பணியாளர்களின் நல வாரியம் சிறப்பாக செயல்படுவதை அரசு உறுதி செய்துள்ளது. தூய்மை பணியாளர்கள் குப்பைகளை கையாளும் போது தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதால், அதற்கு சிகிச்சை அளிக்க தனி திட்டம் செயல்படுத்தப்படும்.
பணியின் போது மரணம் அடையும் தூய்மை பணியாளர்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. சுயதொழில் தொடங்கும் போது அவர்களுக்கு மூன்று புள்ளி 50 லட்சம் வரை மானியம் வழங்கப்படும் இதற்கென பத்து கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கான புதிய உயர் கல்வி உதவி திட்டம் செயல்படுத்தப்படும்.
நகர்ப்புறங்களில் சொந்த வீடு இல்லாத தூய்மை பணியாளர்களுக்கு 30,000 புதிய குடியிருப்புகள் கட்டித் தரப்படும். தூய்மை பணியாளர்களுக்கு கூடுதலாக ரூபாய் 5 லட்சம் இலவச காப்பீய்மை பணியாளர்களுக்கு காலை உணவு அந்தந்த ள்ளாட்சி அமைப்புகளால் கட்டணமின்றி வழங்கப்படும். இத்திட்டம் முதன் முதலில் சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்படும். அதன்பின் படிப்படியாக மற்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரிவுப்படுத்தப்படும்.
நீதிமன்ற உத்தரவால் கைது செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பவவந்தமாக வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கம் அரசுக்கு இல்லை. பணி நிரந்தரம் குறித்த வழக்குகளின்முடிவுகளை பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் 12 கட்டமாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. அனைவரும் வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என அரசு சார்பில் கேட்டுக் கொள்ளபடுகிறது. அரசின் கதவுகள் பேச்சுவார்த்தைக்கு எப்போதும் திறந்திருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இன்னும் எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே நம் நாட்டிலே?: டாக்டர் அன்புமணி
எப்போது வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போது அஜித்தை வைத்து படம் இயக்குவேன்: லோகேஷ் கனகராஜ்
சென்னையில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் தொடக்கம்: அமைச்சர் தங்கம் தென்னரசு
அவதூறு பரப்புகிறார்கள்..போற்றுவோர் போற்றட்டும்..புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும்..டாக்டர் ராமதாஸ்
மலையாள நடிகை மினு முனீர் கைது.. சிறுமியை தவறாகப் பயன்படுத்தியதாக சென்னையில் புகார்
பணி நிரந்தரம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைதுக்கு ஈபிஎஸ் கண்டனம்
Coolie Movie Review: ரஜினியின் "கூலி" படம் எப்படி இருக்கு.. தியேட்டர் அதிருதா.. இல்லை..?
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று எவ்வளவு தெரியுமா?
79வது சுதந்திர தினம்.. தாய்த் திருநாட்டின் தியாகிகளுக்கு சல்யூட்.. பாரத அன்னைக்கு வணக்கம்!
{{comments.comment}}