BSNL லோகோ மாறிப் போச்சு.. அது மட்டுமா.. 7 புதிய சேவைகளும் அறிமுகம்!

Oct 22, 2024,06:24 PM IST

டெல்லி: பிஎஸ்என்எல் நிறுவனத்தின் லோகோ மாற்றப்பட்டு புதிய லோகோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு புதிதாக 7 சேவைகளையும் பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.


சிடாக் நிறுவனத்துடன் இணைந்து புதிய 5ஜி கட்டமைப்பு சேவையை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது. இது சுரங்கப் பணிகளுக்கான சிறப்பு சேவையாகும். 


அரசுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்தது. அதன் சேவை அட்டகாசமாகவும் இருந்தது. ஆனால் காலப் போக்கில் அது பொலிவிழந்து நலிவடைந்து தளர்ந்து போனது. தற்போது மீண்டும் புத்துயிர் பெற்று வருகிறது. சமீப காலமாக பிஎஸ்என்எல் செல்போன் சேவைக்கு பலரும் மாறி வருகின்றனர். 




இந்த நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் லோகோவை மாற்றியுள்ளது. புதிய லோகோவை அறிமுகப்படுத்தியுள்ளது.  விரைவில் 4ஜி சேவையை பிஎஸ்என்எல் நிறுவனம் தொடங்கவுள்ள நிலையில் இந்த புதிய மாற்றங்கள் அறிமுகமாகியுள்ளன.


பழைய லோகோவில் இருந்த Conencting India என்ற வாசகம் Connecting Bharat  என்று மாற்றப்பட்டுள்ளது. அதன் இலச்சினையில் இருந்த நிறமும் மாறியுள்ளது. முன்பு இருந்தது போல இல்லாமல் இப்போது காவி நிறப் பின்னணியில் இந்தியாவின் வரைபடமும் பச்சை மற்றும் வெண்மை நிற வளையமும் இடம் பெற்றுள்ளது. இதுதவிர புதிதாக Securely Affordably Reliable என்ற ஸ்லோகனும் இடம் பெற்றுள்ளது.


இதுதவிர 7 புதிய சேவைகளையும் பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்பேம் இல்லாத கட்டமைப்பு, தேசிய அளவிலான வைபை ரோமிங் வசதி, சிம்களை எந்த நேரத்திலும் வாங்க வகை செய்யும் கியாஸ்க்குகள், டைரக்ட் டு டிவைஸ் சேவை, சுரங்கங்களுக்கான 5ஜி சேவை, இன்ட்ராநெட் டிவி உள்ளிட்டைவயும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் இன்று முதல் ஆக., 3ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

கட்சி ஆரம்பிச்சு ஒன்னுமே இல்ல... அதுக்குள்ள Z பிரிவு y பிரிவு ... மறைமுகமாக தவெகவை தாக்கிய சீமான்!

news

ஆபரேஷன் மகாதேவ் அதிரடி.. காஷ்மீரில் ராணுவ வேட்டையில்.. 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

news

காப்புரிமை விவகாரம்: இளையராஜா மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

news

திமுக அரசு குற்றம் நடைபெறாமல் தடுப்பதில்லை, குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்வதுமில்லை: அண்ணாமலை

news

BCCI.. மாத்துறோம்.. மொத்தமா மாத்துறோம்.. இங்கிலாந்து தொடருக்குப் பிறகு.. பிசிசிஐ முடிவு!

news

திருஞான சம்பந்தருக்காக.. நந்தியே விலகி நின்ற.. பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் திருக்கோவில்!

news

60 வயதிலும் 20 வயது இளைஞர் போல இருக்கணுமா.. அப்படீன்னா இதை பாலோ பண்ணுங்க!

news

துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு காந்தா படத்தின் டீசர் வெளியீடு!

அதிகம் பார்க்கும் செய்திகள்