டில்லி : பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மூன்றாவது முறையாக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இன்று முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அனைவரும் பட்ஜெட் உரையில் என்ன இருக்கும்? மிடில் கிளாஸ் மக்களுக்கு சாதகமாக இந்த பட்ஜெட் இருக்குமா? என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
மற்றொரு பக்கம் எதிர்க்கட்மிகளோ பல்வேறு பிரச்சனைகளை முன்னிலைப்படுத்தி புயலை கிளப்ப திட்டமிட்டுள்ளன. பணவீக்கம், மகா கும்பமேளாவின் சமீபத்தில் நடைபெற்ற கூட்ட நெரிசல், கடந்த கூட்டத் தொடரில் டாக்டர் அம்பேர்கர் குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா பேசிய கருத்தி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பிரச்சனையை கிளப்பி, மத்திய அரசுக்கு எதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன் வைக்க திட்டமிட்டுள்ளன.

இந்த விஷயத்தில் இந்தியா கூட்டணியின் அனைத்து கட்சிகளும் ஒன்று பட்டு இருப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. அதே போல் வேலைவாய்ப்பு, வஃக்பு வாரி மசோதா விவகாரம், எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் பார்லிமென்ட் கூட்டுக் குழுவில் இருந்து நீக்கப்பட்டது என மத்திய அரசுக்கு எதிராக முன் வைக்க உள்ள பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சிகள் குறிப்பிடும் விவகாரங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
தற்போது நடைபெறும் பட்ஜெட் கூட்டத் தொடரில் எப்படி செயல்படலாம் என்பது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் இல்லத்தில், இந்தியா கூட்டணி தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தி உள்ளனர். பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளில் பணவீக்கம், வேலையில்லாத தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்ப திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்றைய பட்ஜெட் தாக்கலின் போது என்ன நடக்குமோ என்ற நிலை உருவாகி உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழகத்தில் ஜனவரி 15 வரை கடும் குளிர்: டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள்: ஆர்ஏசி, வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுகள் கிடையாதாம்
திமுக.,வை வீழ்த்த பாஜகவின் 90 நாள் அதிரடித் திட்டம்...நிதின் நபின் வேண்டுகோள்
'ஜனநாயகன்'வருவதில் தாமதம்... ரீ ரிலீசாகும் விஜய்யின் பிளாக்பஸ்டர் 'தெறி'
தொழில்நுட்பக் கோளாறு...பிஎஸ்எல்வி சி62 செயற்கைகோள் இலக்கை அடையவில்லை... இஸ்ரோ விளக்கம்
கமலஹாசனின் பெயர், போட்டோவை வணிகரீதியாகப் பயன்படுத்த தடை
இளைஞர்களின் எழுச்சி நாயகன்!
தேசிய இளைஞர் தினம் (National Youth Day).. யாருடைய பிறந்த நாளை கொண்டாடுகிறார்கள் தெரியுமா?
மார்கழித் திங்கள் அல்லவா.. வாசலில் விரியும் வாழ்வியல் கலை!
{{comments.comment}}