- ஷீலா ராஜன்
"ஒரு ஆஃப் ரெண்டு ஃபுல் டிக்கெட் குடுங்க....."".
கண்டக்டர் முழு டிக்கெட்டா தா கொடுப்பேன் அர டிக்கெட்டா கிழிச்சி தர முடியாது என்று காமெடி பண்ணிக் கொண்டே டிக்கெட்டை கொடுத்தார் ....
அட பையனுக்கு அஞ்சு வயசுங்க அதனால தான் அரை டிக்கெட் கேட்டேன்... அட ஆமாங்க நானும் அதான் சொல்றேன் டிக்கெட் முழுசா கொடுப்பேன் காசு மட்டும் கம்மியா வாங்கிக்கிறேன்.... எனக்கு காமெடியை ஆரம்பித்த கண்டக்டரை பார்த்து பயணம் கலகலப்பாக இருக்கும் என்று மனசு லேசாக தொடங்கியது......
இந்த பஸ் என் ஸ்டாப்பிங்ல நிக்குமா என்ற பாட்டியை பார்த்து பாட்டி இந்த பஸ் எப்பவுமே உட்காராது என்ற கண்டக்டரின் குரல் அனைவரின் முகத்திலும் புன்னகையை கொண்டு வந்தது ...

எனக்கு அந்த ஜன்னல் சீட்டு என்ற காலேஜ் ஸ்டுடென்ட்டைப் பாத்து உனக்கு அதை கொடுக்கிறேன் போகும்போது எடுத்துட்டு போயிடாதப்பா என்றவரைப் பார்த்து அந்த ஸ்டுடென்ட் நக்கலாக" அப்ப டிரைவர் சீட்டை குடுங்க என்றான்....
""அத குடுத்தா நீ எல்லாருக்கும் மொத்தமா டிக்கெட் கொடுத்து டுவியே என்ற தாத்தாவை பார்த்து பஸ்ஸில் இருந்த எல்லோரும் சிரிக்க ஆரம்பித்தனர்... பரவாயில்லையே தாத்தா கூட ஜோக் அடிக்கிறாரு என்ற நடுத்தர வயது பெண்.. கண்டக்டர் மாதவரம் கொடுங்க அப்படின்னு கேட்க மாதவரத்தை உன் கிட்ட கொடுத்துட்டா நாங்க அங்க எப்படி வாழறது என்ன கேள்வி கேட்ட ஆசாமிய பார்த்து.. "ஐய ஜோக் சொல்லிட்டாரு சிரிங்கப்பா"" என சொல்லி அந்தப் பெண்ணும் சிரித்து விட்டார்....
கருவாட்டு மண்டி குடுப்பா என்ற ஆயாவிடம் கண்டக்டர் டிக்கெட்டை கிழித்துக் கொடுத்தபடியே அவ்வளவு கருவாட்டயும் வாங்கி என்ன பண்ண போற உனக்கு தான் கடவா பல்லு கூட இல்லையே என்று கண்டக்டர் கலாய்க்க ஆரம்பித்தார்..... எனக்கு பல்லுல இல்லைன்னா என்ன என் வீட்டுக்காருக்கு வாங்கிட்டு போவேன் என்று பாட்டியும் ஜோக் அடித்தார்... நீ வைக்கிற குழம்ப சாப்பிட்டு அந்த தாத்தா இன்னும் உயிரோடவா இருக்காரு.. என்று கேட்க கூடியது கலகலப்பு.
அதற்குள் நான் இறங்க வேண்டிய பஸ் நிறுத்தம் வந்தவுடன் இறங்க மனதில்லாமல் இறங்கினேன். இப்படி சிரித்து எத்தனை காலம் ஆகிறது என்றபடியே நடக்க ஆரம்பித்த என்னை பார்த்து, யார் பெத்த பிள்ளையோ தானா சிரிச்சுகிட்டு நடக்குது என பூக்கடைக்காரர் கூறுவது என் காதில் விழ, மேலும் சிரித்துக் கொண்டே நடந்தேன்.... என்ன நீங்களும் சிரிக்கிறீங்களா!!
Navartri 2026 Special: வருஷத்துக்கு நான்கு நவராத்திரி வரும்.. இது தெரியுமா உங்களுக்கு?
Cooking Tips: ராகி + பால் + நட்ஸ் கஞ்சி.. healthy food.. Tips by G Yasmin!
நம் மகளின் புன்னகையில் நல்வாழ்வு மலரட்டும்!
D Rajitha Poem.. கிடைக்காத பேருந்து!
நவராத்திரி ஸ்பெஷல்.. இன்றும் நாளையும் என்னவெல்லாம் செய்ய வேண்டும்.. Full List!
Thentamil Editorial: பக்தியும் பரவசமும் சங்கமிக்கும் நவராத்திரி.. மைசூர் முதல் குலசேகரப்பட்டினம் வரை
மகன் .. அழகிய செடிக்கு மலரை அளிக்கும் உயிர் படைப்பு!
பெண்.. தலை நிமிர்ந்து நிற்கும் மிகப் பெரும் ஜோதி!
நட்பூ
{{comments.comment}}