சென்னை: வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம் தொடர்பாக ஆட்டோக்களில் பிரசாரம் செய்ய தொண்டர்களுக்கு தவெக அறிவுறுத்தல் விடுத்துள்ளது. அத்துடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு எற்படும் வகையில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு நோட்டீஸ் விநியோகிக்கவும் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த மாதம் பிப்ரவரி 2ம் தேதி தொடங்கப்பட்ட கட்சி தான் தவெக. இந்த கட்சியின் நிலைமை அக்டோபர் 27ம் தேதிக்கு பின்னர் தலைகீழாகவே மாறிவிட்டது என்று சொல்லலாம். ஏன் என்றால் மாநாட்டிற்கு முன்னர் வரை சாதாரணமாகவே இருந்தது தவெக கட்சி. மாநாட்டிற்கு பின்னர் அந்த கட்சி குறித்தும், அந்த கட்சி தலைவர் விஜய் பேசியது குறித்து அனைத்து கட்சியினரும் காரசாரமாக விவாதத்தை தொடங்கி விட்டார்கள். மாநாடு முடிந்து பல நாட்கள் ஆன பின்னரும் இன்று வரை தவெக கட்சி குறித்த பேச்சாகவே இருந்து வருகிறது எனலாம்.
யார் என்ன விமர்சனம் செய்தாலும் எங்க வழி தனி வழி என்று எதையும் பொருட்படுத்தாது, தங்கள் கட்சிப்பணிகளில் மட்டுமே கவனமாகவும், டீப்பாகவும் செய்படுவோம் என்று தவெக தலைவர் விஜய் பாணியில் பயணித்து வருகின்றனர் தவெக தொண்டர்கள். 2026ம் ஆண்டு தான் சட்டசபை தேர்தல் என்றாலும் இப்போதே தேர்தல் பணிகளை ஒவ்வொன்றாக செய்து வருகின்றனர் தமிழக வெற்றிக் கழக கட்சியினர்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம் நடைபெறுள்ளது. பெயர்கள் விடுபட்டோர் இதில் சேர்த்துக் கொள்ளலாம். இதை தவெகவும் கையில் எடுத்துள்ளது. இது தொடர்பாக ஆட்டோக்களில் பிரசாரம் செய்ய தொண்டர்களுக்கு தவெக அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் நோட்டீஸ் விநியோகிக்கவும் அறிவுறுத்தல் செய்துள்ளார் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த். அது மட்டும் இன்றி நவ., 16,17,23 தேதிகளில் தேர்தல் ஆணையம் நடத்தும் சிறப்பு முகாம்களில் பெயர் சேர்க்க பரப்புரை செய்க என்றும் தவெக பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஒற்றைக் கொம்போனே.. ஓர்கணிக்கு அம்மையப்பனை சுற்றி வந்து பெற்றவனே!
எலிகள் செய்யும் பூஜை.. விநாயகரின் செம டான்ஸ்.. ஏஐயில் கலக்கும் பிள்ளையார் வீடியோக்கள்!
காதலிப்பதாக இருந்தால்.. இதயம் முரளி மாதிரி இருக்காதீங்க.. சீனத்து லியூ போல போட்டு உடைச்சிருங்க!
பிள்ளையாரை வழிபட சிறந்த நைவேத்தியங்கள் என்னென்ன.. விநாயகர் சதுர்த்தி சிறப்புகள்
அன்புள்ள அம்மா.. அருமையான அப்பா!
ஜம்மு காஷ்மீரை உலுக்கி எடுத்த கன மழை.. வைஷ்ணவ தேவி கோவிலுக்குச் சென்ற 5 பக்தர்கள் பலி
தமிழ்நாட்டில் நாளை முதல் 7 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
விஜய் வேஷம் கலைந்து விட்டது... விரைவில் காலி பெருங்காய டப்பா போல் ஆகி விடுவார்: அமைச்சர் சேகர்பாபு
திமுக-அதிமுக...எத்தனை இடங்களில் போட்டியிட்டால்.. கூட்டணி ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்கலாம்?
{{comments.comment}}