- மீனா
புரட்டாசி மாசம் முடியப் போகுது.. கறிக் கடைகளில் இனி வழக்கம் போல கூட்டம் குபுகுபுவன குவியும்.. ஒரு மாசமாக வாயைக் கட்டியிருந்தோர் எல்லாம் இப்போது ஹேப்பியாகிருப்பார்கள்.. இனி அவர்களுக்கு குஷிதான்.. ஆடு, கோழிகளுக்குத்தான் கஷ்டம்!
வாங்க ஜாலியா இந்த மாலையை சில "பை பை புரட்டாசி" ஜோக்ஸோடு முடிச்சுப்போம்.
உனக்கு என்ன கஷ்டம்?

பக்தன் : கடவுளே என் கஷ்டத்தை கேட்கும் வரை என் தவத்தை நிறுத்த போவதில்லை.
கடவுள்: மகனே உன் தவம் என்னை சிலிர்க்க வைத்தது. உனக்கு என்ன கஷ்டம்
பக்தன்: என்னுடைய கஷ்டத்தை நான் யாரிடம் போய் சொல்ல முடியும்.
கடவுள்: அதான் நானே வந்து விட்டேனே சொல் உன் கஷ்டத்தை.
பக்தன்: மாதங்களில் புரட்டாசி மாதத்தை மட்டும் நீக்கிவிட வேண்டிக் கொள்கிறேன். நான்வெஜ் சாப்பிட முடியாமல் மிகவும் கஷ்டமாக உள்ளது.
கடவுள்: உன் வேண்டுதல் கேட்கப்பட்டது. நாளையில் இருந்து உனக்கு புரட்டாசி மாதம் கிடையாது.
பக்தன்: (சந்தோஷத்தில்) மிகவும் நன்றி கடவுளே. இதை நான் மறக்கவே மாட்டேன். நீங்கள் என் மேல் வைத்த கருணைக்கு நன்றி.
கடவுள்: இன்றோடு தான் புரட்டாசி முடிய போகுதே. நாளையில் இருந்து ஐப்பசி தானே ஆரம்பிக்கிறது அத தானே சொன்னேன் எதற்கு இவ்வளவு உணர்ச்சிவசப்படுகிறாய்.
பக்தன்: 😲
அப்பா மேல இம்புட்டு பாசமாடா மகனே!

அப்பா: இன்னைக்கு அம்மாவுக்கு உடம்புக்கு முடியல. அதனால ஹோட்டல்ல சாப்பாடு வாங்க போறேன்.
பையன்: வேணாம்ப்பா காசு இல்லாத நேரத்துல ஏம்பா கடையில வாங்குறீங்க .
அப்பா: பரவாயில்ல மகனே . அப்பா மேல தான் உனக்கு எவ்வளவு அக்கறை .
மகன்: ஆமாப்பா, இருக்காதா பின்ன.... But நாளைக்கு ஹோட்டல்ல வாங்கி கொடுங்கப்பா.
அப்பா: எதுக்குடா?
மகன்: இன்னைக்கு வாங்கினீங்கன்னா வெஜ் தானே வாங்கி தருவீங்க. அதே நாளைக்கு வாங்குனா நான்வெஜ் கிடைக்குமில்ல. ஏன்னா இன்னையோட புரட்டாசி முடியுதுல்ல அதனால தான் சொன்னேன்.
அப்பா: அடப்பாவி மகனே!
புரட்டாசி முடியுதே மாப்ளே!

நண்பன் 1: எப்பவுமே கடவுளிடம் எனக்காக வேண்டுவதை விட மற்றவர்களுக்காக தான் அதிகமாக வேண்டுவேன்.
நண்பன் 2: எப்படி சொல்ற?
நண்பன் 1: இப்ப கூட பாரு எனக்கு கல்யாணம் ஆகாட்டினாலும் பரவாயில்லை. என் நண்பனுக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகணும்னு தான் வேண்டிக்கிட்டேன்.
நண்பன் 2: என் மேல உனக்கு இவ்வளவு பாசமடா.
நண்பன் 1: ஆமாடா புரட்டாசி இன்னையோட முடிறதனால உன் கல்யாணத்தில் நான்வெஜ் ஒரு பிடி பிடிக்கலாம் இல்ல.
நண்பன் 2: அடப்பாவி!😳
Bye Bye புரட்டாசி

India win Women's world cup: அபார பீல்டிங்.. அட்டகாச பவுலிங்.. இந்திய மகளிருக்கு முதல் உலகக் கோப்பை!
SIR பணிகளை நிறுத்த வேண்டும்.. இல்லாவிட்டால் வழக்குத் தொடர்வோம்.. அனைத்துக் கட்சிக் கூட்டம் தீர்மானம்
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியே SIR.. விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு
அடிப்படை ஜனநாயக உரிமையைக் கேள்விக்கு உள்ளாக்கும் சிறப்புத் தீவிரத் திருத்தம்.. தவெக
SIR-க்கு எதிராக ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டியது நமது கடமை.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 7ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!
ஸ்ரீகாகுளம் கோவில் நிர்வாகம் அனுமதி வாங்கவில்லை...விசாரணைக்கு ஆந்திர முதல்வர் உத்தரவு
அரசின் தோல்விக்காக.. ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை கையேந்த வைப்பது கண்டிக்கத்தக்கது: அன்புமணி
மத்திய அரசு பள்ளிகளில் இந்தியை திணிக்கிறது...சித்தராமைய்யா காட்டம்
{{comments.comment}}