சென்னை: பெரியார் குறித்துக் கூறிய கருத்துக்களைக் கண்டித்து குவிந்த புகார்களின் அடிப்படையில் இதுவரை 11 மாவட்டங்களில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மீது போலீஸார் பல்வேறு பிரிவுகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். இதன் அடிப்படையில் சீமான் கைது செய்யப்படுவாரா என்ற பரபரப்பு எழுந்துள்ளது.
செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில், பெரியார் குறித்து பல்வேறு கருத்துக்களைக் கூறியிருந்தார் சீமான். இந்தக் கருத்துக்கள் பெரும் சலசலப்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பெரியார் கூறியதாக சீமான் கூறிய அனைத்துமே பொய்யானவை, அவதூறானவை, அடிப்படை ஆதாரம் இல்லாதவை என்று தி.க., திமுக, தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அமைப்புகள் கூறி வருகின்றன.

ஆனால் தான் பேசிய பேச்சுகளுக்கு ஆதாரம் உள்ளது. தான் கூறிய கருத்துக்களுக்கு ஆதாரம் உள்ளது. அதை நான் வெளிப்படுத்துகிறேன். அதற்கு முன்பு அந்த ஆதாரங்கள் உள்ள பெரியாரின் படைப்புகளை முதலில் நாட்டுடமை ஆக்குங்கள். அதை ஏன் செய்யாமல் உள்ளீர்கள் என்று பதிலளித்துள்ளார் சீமான். மேலும், பெரியார் கூறிய பல்வேறு கருத்துக்களையும் அவர் மேற்கோள் காட்டி, இதற்கெல்லாம் ஏன் இவர்கள் ஆதாரம் கேட்கவில்லை என்றும் கூறி வருகிறார்.
இந்த நிலையில் சீமானுக்கு ஆதரவாக பாஜக தலைவர் அண்ணாமலையும் கருத்து தெரிவித்துள்ளார். பெரியார் பேச்சுக்கள் தொடர்பான ஆதாரங்களை நான் வெளியிடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் சீமான் மீது பல்வேறு மாவட்டங்களில் திமுக, திக, தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்டவற்றின் சார்பில் புகார்கள் குவிந்து வருகின்றன. இதன் அடிப்படையில் இதுவரை 11 மாவட்ட காவல் நிலையங்களில் சீமான் மீது முதல் தகவல் அறிக்கையை போலீஸார் பதிவு செய்துள்ளனர். சென்னை தொடங்கி, சேலம், கடலூர், மதுரை, திண்டுக்கல், தென்காசி என்று வழக்குகள் நீண்டு கொண்டே போகின்றன.
போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளதால், சீமான் கைது செய்யப்படக் கூடும் என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது. ஆனால் சீமான் கைது குறித்துக் கவலைப்படாமல் தொடர்ந்து தனது நிலைப்பாட்டை உறுதியாக வலியுறுத்தி பேசிக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மண்ணுக்கு மரம் பாரமா.. மரத்துக்கு இலை பாரமா.. இந்தப் பாடலை மறக்கத்தான் முடியுமா?
வில்லங்கமாக பேசிய விஸ்வநாதன்.. அமைதியாக பதிலடி கொடுத்த நடிகர் சூரி!
ஊழல் செய்தால் பணி மாற்றம் இல்லை, பணி நீக்கம் செய்ய வேண்டும்: சீமான் ஆவேசம்!
நாளைய உலகும் இன்றைய நம் கடமையும்
இயற்கையில் ஏன் .. இந்த முரண்பாடு?
வீரர்களின் கனவு நனவானது... ஜல்லிக்கட்டை தூக்கி சாப்பிட்ட முதலவர் முக ஸ்டாலினின் 2 அறிவிப்புக்கள்!
அதிமுக-திமுக வெளியிட்ட அதிரடி அறிவிப்புகள் சாத்தியமா?...வாங்க தூர்வாரலாம்
ஸ்டாலின் 2...இபிஎஸ் 5...போட்டி போட்டு தேர்தல் வாக்குறுதிகள் அள்ளி வீசும் திமுக-அதிமுக
சிறந்த மாடுபிடி வீரருக்கு அரசு வேலை...முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
{{comments.comment}}