டில்லி : பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து, இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் கொடி ஏந்திய கப்பல்களுக்கு தடை விதித்து மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதோடு இமெயில், போஸ்ட் என பாகிஸ்தான் உடனான அனைத்து தொடர்புகளுக்கும் இந்தியா அதிரடி தடை விதித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக தெரிய வந்ததும், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மோசமடைந்தது. அதாவது இந்தியா.பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன்படி, இந்தியா உடனடியாக செயல்பட்டு, இந்திய பாகிஸ்தான் இடையே போடப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. பாகிஸ்தானியருக்கு வழங்கப்பட்ட விசாக்களும் ரத்து செய்துள்ளது. இந்தியாவில் தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான வாகா-அட்டாரி எல்லை பகுதிகள் மூடப்பட்டது. எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரிப்பதை தடுக்கும் வகையில் பாகிஸ்தானில் இருந்து வரும் அனைத்து இறக்குமதி பொருட்களுக்கும் இந்தியா தடை விதித்துள்ளது. தேசிய பாதுகாப்பு மற்றும் பொது நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா கடுமையாக்கி வரும் நிலையில், தற்போது இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் கொடி ஏந்திய கப்பல்களுக்கு தடைவிதித்துள்ளது. மேலும் இந்திய கொடி ஏந்திய எந்த கப்பல்களும் பாகிஸ்தான் துறைமுகங்களுக்கு செல்லக்கூடாது எனவும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார உறவு பாதிக்கப்படும் என கூறப்படுகிறது. அதோடு பாகிஸ்தானில் இருந்து வரும் இமெயில், போஸ்ட் ஆகியவற்றிற்கும் தடை விதித்துள்ளது இந்தியா.
புஸ்ஸி ஆனந்த், சிடிஆர் நிர்மல்குமார் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி.. இன்று இரவுக்குள் கைது?
விஜய்க்கு தலைமைத்துவ பண்பே இல்லை.. தவெகவை சரமாரியாக விமர்சித்த ஹைகோர்ட் நீதிபதி செந்தில்குமார்
கரூர் சம்பவம்... சிறப்பு புலனாய்வு குழு நியமனம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
கீழடி கண்டேன், பெருமிதம் கொண்டேன்: கீழடி குறித்த முதல்வர் முக ஸ்டாலினின் நெகிழ்ச்சி பதிவு!
இரத்தத்தை உறிஞ்சி உயிர்வாழும் ஒட்டுண்ணி பாஜக: முதல்வர் முக ஸ்டாலின் விமர்சனம்
தவெக மாவட்டச் செயலாளர் சதீஷ்குமாரின் முன்ஜாமின் மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு
கரூர் சம்பவத்திற்கு சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி... மதுரை ஹைகோர்ட் கிளை அதிரடி உத்தரவு
210 தொகுதிகளில் அதிமுக வெல்லும்..அதற்கு சாட்சி தருமபுரியில் கூடிய இந்த கூட்டம் எடப்பாடி பழனிச்சாமி
முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் மாளிகை, நடிகை திரிஷா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
{{comments.comment}}