டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நினைவிடம் அமைக்க இடம் ஒதுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்துள்ளார். முன்னதாக இதுதொடர்பாக காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் இன்று தகனம் செய்யப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அவரது உடல் ராஜ்காட் அருகே தகனம் செய்யப்படவுள்ளது. அவருக்கு முழு அரசு மரியாதைகளுடன் இறுதிச்சடங்குகள் நடைபெறவுள்ளன.
இந்த நிலையில் மறைந்த முன்னாள் பிரதமர்கள், உயரிய தலைவர்களுக்கு அவர்களது உடல் அடக்கம் அல்லது தகனம் நடைபெறும் இடத்தில்தான் நினைவிடம் அமைக்கப்படும். இதுதான் வழக்கம். அந்த வகையில் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் இடம் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் எழுப்பியது. இதுதொடர்பாக பிரதமர் மோடியுடன், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும் பேசினார். மன்மோகன் சிங் இறுதிச் சடங்குகள் நடைபெறும் இடத்திலேயே நினைவிடம் அமைக்க வேண்டும் என்று அவர் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில் மத்திய அரசு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில், மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கண்டிப்பாக நினைவிடத்திற்கான இடம் ஒதுக்கித் தரப்படும். அதுவரை இறுதிச் சடங்குகள் தொடர்ந்து நடைபெறலாம் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ஒரு புகழ் பெற்ற தலைவருக்கு உரிய நினைவிட இடத்தை முடிவு செய்வதில் இத்தனை தடுமாற்றம் ஏன். இந்தியாவின் முதல் சீக்கிய பிரதமரை பாஜக அவமானப்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார்.
ஆனால் காங்கிரஸ் இதில் அசிங்கமான அரசியல் செய்கிறது. அதை முதலில் காங்கிரஸ் நிறுத்த வேண்டும் என்று பாஜக கூறியுள்ளது. முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவை காங்கிரஸ் அவரது மறைவுக்குப் பிறகு எப்படி நடத்தியது என்பதை அனைவரும் அறிவர். அதேபோல முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியையும் காங்கிரஸ் அவமானப்படுத்தியதை நாடு அறியும் என்று கூறியுள்ளது பாஜக.
இந்த வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில் டாக்டர் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகள் தற்போது மும்முரமாக நடந்து வருகின்றன.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Pralay Missile: ஏவுகணைகளின் பிறப்பிடம் ஆகிறதா இந்தியா?.. பிரமிக்க வைக்கும் பிரளய்!
பிறந்தது புத்தாண்டு.. இந்தியா முழுவதும் கொண்டாட்டம்.. மக்கள் மகிழ்ச்சி வெள்ளம்
100 கோடி நன்கொடை! கான்பூர் ஐஐடி மாணவர்கள் செய்த நெகிழ்ச்சியான செயல்!
டிக் டிக் டிக்... கடிகாரம் மாட்டும் திசையை வைத்து வீட்டின் நன்மைகள் இருக்காம்... இதோ முழு விபரம்!
தானத்தில் சிறந்த தானம் எது தெரியுமா?
கரூர் சம்பவ வழக்கு...விரைவில் விஜய்க்கு சம்மன் அனுப்ப வாய்ப்பு
எங்கள் விவகாரத்தில் தலையிட நீங்கள் யார்?.. மதிமுக, விசிக, கம்யூ.களுக்கு காங். எம்.பி. கேள்வி
முக்கிய முடிவுகள்?.. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜன. 6ல் அமைச்சரவைக் கூட்டம்
திருவாதிரையில் ஒரு வாய் களி.. சரி அதை விடுங்க.. களி பிறந்த கதை தெரியுமா?
{{comments.comment}}