சென்னை: கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், ஈரோடு, தேனி, திண்டுக்கல் ஆகிய 7 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில்,
1. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
2.தென் இந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
3.தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
4. ராயலசீமா மற்றும் அதனை ஒட்டிய பகுதிளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,
இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திண்டுக்கல், திருப்பூர், கிருஷகணகிரி, தர்மபுரி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (ஆகஸ்ட் 6) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மழை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஆகஸ்ட் 7ம் தேதி வட தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஆகஸ்ட் 8ம் தேதி வட தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஆகஸ்ட் 9ம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஆகஸ்ட் 10 மற்றும் 11ம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இன்று (05-08-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26°-27°செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (06-08-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34°=35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26°-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
உத்தராகண்ட் வரலாறு காணாத காட்டாற்று வெள்ளத்தால் மலைச்சரிவு... 17 பேர் உயிரிழப்பு!
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆக., 14ல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்
7 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்!
எங்கள் வேலை வாய்ப்புகளை இந்தியர்கள் பறிக்கிறார்கள்.. அமெரிக்க குடியரசுக் கட்சி பிரமுகர் புலம்பல்
சேலத்து மகாராணி.. கோட்டை மாரியம்மன் கோவில் ஆடித் திருவிழா.. களை கட்டிக் காணப்படும் சேலம்!
தமிழ்நாடு தந்த அன்பை.. சிறப்பாக திருப்பிக் கொடுத்துள்ளீர்கள்.. சூர்யாவுக்கு கமல்ஹாசன் பாராட்டு
மிக்சர் சாப்பிடலையாம்.. விஜய்யின் அமைதிக்கு இது தான் காரணமா?.. இது லிஸ்ட்லையே இல்லையே!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 05, 2025... இன்று உதவிகள் தேடி வரப்போகும் ராசிகள்
தவெக 2வது மாநில மாநாடு.. இன்று புதிய தேதியை அறிவிக்கிறார் விஜய்.. அனுமதி கிடைக்குமா?
{{comments.comment}}