முழுசா சந்திரமுகியாக மாறிய கங்கனா.. மயங்க வைப்பாரா கீரவாணி?

Aug 06, 2023,04:08 PM IST
சென்னை : பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தான் சந்திரமுகி 2 படத்தின் டைட்டில் ரோலில் நடிக்கிறார்.  கங்கனா சந்திரமுகியாக இருக்கும் அசத்தலாக ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ள நிலையில் அடுத்து படத்தின் சிங்கிள் வெளியாகவுள்ளது.

பி.வாசு இயக்கத்தில் ரஜினி நடித்த பிளாக்பஸ்டர் படமான சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகமாக சந்திரமுகி 2 படம், பெரிய பட்ஜெட் படமாக எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஹீரோவாக ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். 

லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில், சந்திரமுகி கெட்அப்பில் செம அசத்தலாக போஸ் கொடுத்துள்ள கங்கனாவின் ஃபோட்டோவுடன் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த கெட்டப்பில் பார்க்கவே அட்டகாசமாக இருக்கிறார் கங்கனா.  நாட்டிய மங்கையாக அழகு மின்ன கங்கனா இருக்கும் இந்த போஸ்டர் அனைவரும் கவர்ந்துள்ளது. 



இதனால் சந்திரமுகி 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. சந்திரமுகி 2 படம் விநாயகர் சதுர்த்திக்கு உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. ஆர்ஆர்ஆர் பட இசையமைப்பாளர் கீரவாணி தான் இந்த  படத்திற்கும் இசையமைத்துள்ளார். 2005 ல் ரிலீசான சந்திரமுகி படத்தில் பாடல்கள் வெகுவாக பேசப்பட்டன. படத்தின் மாபெரும் வெற்றிக்கு அப்படத்தின் பாடல்களும் முக்கியக் காரணம்.

குறிப்பாக ஜோதிகா, சந்திரமுகியாக மாறி பாடும் ரா..ரா...பாடல் மிகப் பெரிய அளவில் ஹிட்டானது. தற்போது ரா ரா பாடலையே மிஞ்சும் அளவிற்கு சந்திரமுகி 2 படத்திலும் ஒரு பாடல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  விரைவில் படத்தின் முதல் சிங்கிளை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

இப்படத்தில் லாரன்ஸ் ராகவேந்திரா, கங்கனா, வடிவேலு, லட்சுமி மேனன், மகிமா நம்பியார், ராதிகா சரத்குமார், ஷிருஷ்டி டாங்கே, ஒய்.ஜி.மகேந்திரா, சுரேஷ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முதல் படம் போலவே, இந்த படமும் திகில் நிறைந்த, காமெடி படமாக உருவாக்கப்பட்டுள்ளது. 

ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படத்தின் புதிய போஸ்டர், 3வது சிங்கிள் ஆகியன வெளியாகி உள்ள அதே சமயத்தில் சந்திரமுகி 2 படத்தின் ஃபர்ஸ்டெலுக்கும் வெளியிடப்பட்டுள்ளதால் இந்த படத்தின் போஸ்டர் இன்னும் அதிகமான வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுள்ளது. அடுத்து வெளியாகவுள்ள முதல் சிங்கிள், கீரவாணி போட்டுள்ள மெலடியாக இருக்கும் என்று பேசப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

முதல்வரின் கோரிக்கை மனு...தமிழகம் வரும் பிரதமரிடம் வழங்க போவது யார் தெரியுமா?

news

தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!

news

வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா

news

Dude.. பிரதீப் ரங்கநாதன் படத்தில் கேமியோ ரோல்.. யார் பண்றாங்கன்னு தெரியுமா?

news

கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி

news

தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 26, 2025... இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

அதிகம் பார்க்கும் செய்திகள்