சென்னை: இந்திய விமானப்படை தினத்தையொட்டி சென்னையில் விமானப்படை வான்வெளி சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை இன்று நடைபெறுவதால் விமான நிலையம் பிற்பகல் 1.45 முதல் 3.15 வரை மூடப்படும் என சென்னை விமான நிலையம் தெரிவித்துள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் வருகின்ற 6ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடக்க இருக்கும் ஏர் ஷேச நிகழ்ச்சிக்காக இந்திய விமானப்படை விமானங்களின் ஒத்திகை நிகழ்ச்சி இன்று சென்னை மெரினா கடற்கரையில் நடக்க உள்ளது. இதற்காக இன்று பிற்பகல் சென்னை விமான நிலையம் 1.45 முதல் 3.15 மணி வரை ஒன்றரை மணி நேரம் மூடப்படுகிறது. இதன் காரணமாக 25 விமானங்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை விமான நிலையம் வெளியிட்ட அறிக்கை:

இந்திய விமானப்படையின் விமானப்படை தின விமான கண்காட்சி தாம்பரம் மற்றும் மெரினா கடற்கரையில் நடைபெறுகிறது. இதன் காரணமாக இன்று முதல் வரும் 8ம் தேதி வரை சென்னை சர்வதேச விமான நிலையம் பயணிகளுக்கு சில பயண அறிவிப்பை வெளியிடுகிறது. விமானப்படை வான்வெளி சாகச நிகழ்ச்சிகள் காரணமாக விமான பயண அட்டவணையில் சில மாற்றங்கள் தேவைப்படுகிறது .
இதன் காரணமாக, சென்னை விமான நிலைய வான் தடம் 15 நிமிடங்கள் முதல் 2 மணி நேரம் வரை பல்வேறு இடைவேளைகளில் மூடப்படும் விரிவான அட்டவணையை பகிர்ந்துள்ளது. அதன்படி, அக்டோபர் 1ம் தேதி 13.45 முதல் 15.15 வரை மூடப்படும். அதைத் தொடர்ந்து அக்டோபர் 2,3,5,6,7 மற்றும் 8 ஆகிய தேதிகளிலும் விமான நிலையம் பல்வேறு நேரங்களில் மூடப்படும். விமானப் பயண அட்டவணைகளை சரிபார்த்து, சமீபத்திய தகவல்களுக்கு பயணிகள் அவர்களின் விமான நிறுவனங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இந்த சிறப்புமிக்க நிகழ்வின் போது, பயணிகளுக்கு சுமூகமான பயண அனுபவத்தை உறுதி செய்வதற்காக சென்னை சர்வதேச விமான நிலையம் இந்திய விமான படையுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. பயணிகள் தங்களின் ஒத்துழைப்பை வழங்க வேண்டும். என்று கேட்டுக்கொண்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}