சென்னை மக்களே.. ரெடியா.. 12ம் தேதி முதல் கன மழை வெளுக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் தந்த அலர்ட்!

Nov 10, 2024,04:47 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் 12ம் தேதி முதல் கன மழை பெய்யத் தொடங்கப் போவதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.


வங்கக் கடலில் ஒரு குறைந்த காற்றவுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளது. இன்று அது உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் சற்று தாமதம் நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒரு வார காலத்துக்கு தமிழ்நாட்டில் மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ஒரு அப்டேட் கொடுத்துள்ளார். அதில், இன்று தமிழ்நாட்டுக்கு மழைக்கு பிரேக். 12ம் தேதி முதல் பருவ மழை மீண்டும் சூடு பிடிக்கும். குறிப்பாக காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கன மழை பெய்யத் தொடங்கும். பிறகு தமிழ்நாட்டின் இதர பகுதிகளுக்கு அது பரவும்.12ம் தேதி முதல் சூப்பரான மழை வாரம் காத்திருக்கிறது என்று கூறியுள்ளார் பிரதீப் ஜான்.




சென்னையில் கன மழை மீண்டும் வரப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசும் உஷாராகி வருகிறது. மாநகராட்சி நிர்வாகம் தேவையான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. கடந்த முறை மழை அதிகம் நின்ற பகுதிகளில் இந்த முறை முன்னேற்பாடுகள் இப்போதே செய்யப்பட்டு வருகின்றன. 


மழை முன்னேற்பாடுகள் குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், கடந்த காலத்தைப் போலவே இப்போதும் பல்வேறு ஏற்பாடுகளைச் செய்துள்ளோம். எப்படிப்பட்ட மழை வந்தாலும் அதை சமாளிக்க அனைவரும் தயாராக இருக்கிறோம். மக்களும் அரசுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அதிரடியாக ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை... சவரன் 76,000த்தை கடந்தது!

news

திராவிட அரசு பொய்யான, மோசடியான அறிவிப்புகளை வெளியிட்டு தமிழக மக்களை ஏமாற்றி வருகிறது: அன்புமணி!

news

கூட்டணி, விஜய் குறித்த கேள்வியை என்னிடம் கேட்காதீர்கள்: பிரேமலதா விஜயகாந்த் காட்டம்!

news

Pillaiyar: விநாயகருக்கு பிள்ளையார் என்ற பெயர் வந்தது எப்படி?

news

விஷால்- சாய் தன்ஷிகா நிச்சயதார்த்தம்...பிறந்தநாளில் எளிமையாக நடந்தது

news

சிறுநீரக கற்களைத் தடுக்கலாம்.. கவலைப்படாம.. இதைக் கொஞ்சம் பாலோ பண்ணிப் பாருங்க

news

இங்கிலாந்து சென்று தந்தை பெரியாரின் படத்தை திறந்து வைக்க போகிறேன்: முதல்வர் முக ஸ்டாலின் பெருமிதம்!

news

தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க.. திமுக கையில் இருக்கும் 4 மேட்டர்!

news

தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.520 உயர்வு!

அதிகம் பார்க்கும் செய்திகள்