சென்னை: கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 9246 கன அடியிலிருந்து 32,240 கன அடியாக அதிகரித்து வருகிறது. அதேபோல சென்னை குடிநீர் வழங்கும் ஏரிகளிலும் நீர் இருப்பு திருப்திகரமாக உயர்ந்துள்ளது.
ஃபெஞ்சல் புயல் எதிரொலியால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக கன மழை கொட்டி தீர்த்தது.
நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் கனமழை காரணமாக சென்னையில் குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் சோழவரம், தேர்வாய் கண்டிகை ஆகிய நீர் தேக்கங்களின் மொத்தக் கொள்ளளவான 11,757 மி.கன அடியில் தற்போது 7,248 மில்லியன் கன அடியாக நீர் இருப்பு உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் இருப்பு பின்வருமாறு:
பூண்டி:

3231 கன அடி மொத்த கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் தற்போது 1,211 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 3,440 கன அடி வந்து கொண்டிருக்கும் நிலையில், வினாடிக்கு 27 கன அடி வெளியேற்றப்படுகிறது.
சோழவரம்:
1081 மி.கன அடி மொத்த கொள்ளளவான சோழபுரம் ஏரியில் தற்போது நீர் இருப்பு 157 மி.கன அடியாக உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 223 கன அடியாக வருகிறது.
புழல்:
3,300 மி.கன அடி மொத்த கொள்ளளவான புழல் ஏரியில் தற்போது, நீர் இருப்பு 2,763 மி.கன அடியாக உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 730 கன அடி வந்து கொண்டிருக்கும் நிலையில், ஏரியிலிருந்து வினாடிக்கு 209 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
கண்ணன்கோட்டை :
ஏரியின் மொத்த கொள்ளளவான 500 மி.கன அடியில் தற்போது நீர் இருப்பு 325 மி.கன அடியாக உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 15 கன அடி வருகிறது.
செம்பரம்பாக்கம் ஏரி:
3,645 மி.கன அடி மொத்த கொள்ளளவான செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது நீர் இருப்பு 2,792 மி.கன அடியாக உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 751 கன அடி வந்து கொண்டிருக்கும் நிலையில், வினாடிக்கு 102 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
மேட்டூர் அணை:
ஃபெஞ்சல் புயல் காரணமாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை பெய்து வந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அணைகள் மற்றும் ஏரிகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. கர்நாடகா நீர் பிடிப்பு பகுதிகளிலும் தொடர் மழை பெய்து வருவதால் காவிரியில் நீர்வரத்து அதிகரித்து, மேட்டூர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
120 அடி மொத்த கொள்ளளவான மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 113.21 அடியாக உயர்ந்துள்ளது. காலை 8 மணி நிலவரப்படி
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 9246 கன அடியிலிருந்து 32,240 கன அடியாக அதிகரித்துக் காணப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
 
                                                                            திருவண்ணாமலையில் நடந்த ஒற்றுமை யாத்திரையில்.. தடம் பதித்த செ.திவ்யஸ்ரீ
 
                                                                            குப்பைமேடாக மாறும் சின்னக்காளி பாளையம்.. திமுக அரசு திட்டத்தை கைவிட வேண்டும்: அண்ணாமலை
 
                                                                            SIR திட்டத்தை எதிர்த்து.. திமுக கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டம்.. விஜய் செல்வாரா?
 
                                                                            ஒரே நேரத்தில் உருவான இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் – சென்னை வானிலை தகவல்!
 
                                                                            பிரதமர் குற்றம் சாட்டியது திமுகவை தான்... தமிழர்களை அல்ல: தமிழிசை சவுந்தர் ராஜன் பேட்டி!
 
                                                                            வண்ணதாசன் - ஒரு சிறு இசை - சிறுகதை நூல்.. மதிப்புரை!
 
                                                                            ரூ.3,250 கோடி ஒப்பந்தம்... தமிழ்நாட்டில் மீண்டும் உற்பத்தியை தொடங்குகிறது ஃபோர்டு!
 
                                                                            நவம்பர் மாதமே வருக வருக.. 30 நாட்கள் கொண்ட நான்கு மாதங்களில்.. கடைசி மாதம்!
 
                                                                            இரும்புப் பெண் இந்திரா காந்தி.. இன்னும் சில பத்தாண்டுகள் இருந்திருந்தால்.. இந்தியா எப்போதோ வல்லரசு!
{{comments.comment}}