சென்னை: சென்னை மாநகராட்சிக்குப்பட்ட பகுதிகளில் மழை முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சென்னை மேயர் பிரியா கூறியுள்ளார்.
தமிழகத்தில் பருவமழை தொடங்கி ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. அத்துடன் தமிழகமும் மழையினால் குளுமை அடைந்துள்ளது. காலை நேரங்களில் வெயில் சுட்டெரித்தாலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் மிதமான முதல் கனமழை பெய்து வருகிறது.

இது குறித்து சென்னை மாநகராட்சி மேயர் பிரியா இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், சென்னையில் வரும் 14, 15ம் தேதிகளுக்குப் பிறகு கனமழை இருக்கும் என வானிலை மையம் கூறியிருக்கிறது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார், துணை முதல்வரும் ஒவ்வொரு பகுதிகளுக்கும் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அமைச்சர்களும் எந்தெந்த பகுதிகளில் எல்லாம் தண்ணீர் தேங்கி நிற்கிறதோ அந்தப் பகுதிகளில் எல்லாம் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.
கடந்த மாதம் பெய்த மழையின் போது சில பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது கண்டறியப்பட்டுள்ளது. 24 மணி நேரத்திற்கு மேலாக எந்தெந்த பகுதிகளில் எல்லாம் தண்ணீர் தேங்கி நின்றது என்பது கண்டறியப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் வரக்கூடிய நாட்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நீர் தேங்கிய பகுதிகளில் மோட்டார் கொண்டு தண்ணீர் குழாய் மூலம் மழை நீர் வடிகாலுக்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.ஒவ்வொரு பகுதிகளிலும் ஆய்வு செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார் மேயர் பிரியா.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பிரச்சார பீரங்கியாக மாறுகிறாரா சரத்குமார்.. யாருக்கு குறி.. தேர்தலில் போட்டியிட விரும்பாதது ஏன்?
Christmas Celebrations: விஜய்யின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட பேச்சு எப்படி இருந்தது?
2025ம் ஆண்டை அதிர வைத்த கரூர்.. ஷாக் கொடுத்த சார்.. செங்கோட்டையனால் ஷேக் ஆன அதிமுக!
தமிழக பொங்கல் பரிசு எப்போது ? வெளியான செம தகவல்
இதுக்கு ஒரு என்டே இல்லையா?...மீண்டும் ரூ.1 லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை
புதிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு
டிசம்பர் 26 வரை தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு...வானிலை மையம் தகவல்
The world of AI.. மனித சிந்தனையின் நவீன வடிவம்.. செயற்கை நுண்ணறிவு
ஏகநாஞ்சேரி என்றொரு கிராமம்!
{{comments.comment}}