Chennai Metro.. மெட்ரோ ரயில் பயணிகளே.. இந்த முக்கியமான மாற்றத்தை நோட் பண்ணிக்கங்க!

Sep 06, 2025,04:58 PM IST

சென்னை: தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் கால இடைவெளியில் செப்டம்பர் 9ம் தேதி முதல் 19ம் தேதி வரை மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


வருடாந்திர முன்னுரிமை பராமரிப்பு பணிகளின் ஒரு பகுதியாக, பச்சை வழித்தடத்திலும் (Green Line) நீல வழித்தடத்திலும் (Blue Line) தண்டவாள பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளது.  பராமரிப்பு அட்டவணை மற்றும் மெட்ரோ ரயில் சேவை மாற்றங்கள் பின்வருமாறு:


பராமரிப்பு பணி காலம்: 09.09.2025 முதல் 19.10.2025 வரை.

நேரம்: காலை 05:00 மணி முதல் 06:30 மணி வரை.


இந்தக் காலகட்டத்தில் மெட்ரோ இரயில் சேவை இயக்கப்படும் நேரங்கள்:




- மெட்ரோ இரயில்கள் காலை 05:00 மணி முதல் 06:30 மணி வரை வழக்கமான 7 நிமிட இடைவெளிக்கு பதிலாக 14 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.


-  காலை 06:30 மணிக்குப் பிறகு, மெட்ரோ இரயில் சேவைகள் வழக்கம் போல் எவ்வித மாற்றமும்மின்றி இயங்கும்.


- இந்த மாற்றங்கள் பச்சை வழித்தடம் மற்றும் நீல வழித்தடங்களில் பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும்.


பராமரிப்புப் பணிகள் காரணமாக, பயணிகள் தங்கள் பயணத்தைத் திட்டமிட்டுக்கொள்ளுமாறு சென்னைமெட்ரோ இரயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது. இரயில் பாதை பராமரிப்புப் பணிகள், இரயில்களின் பாதுகாப்பான மற்றும் நம்பகமான இயக்கத்திற்கு மிகவும் அவசியம். பயணிகள் இந்த அறிவிப்பைக்கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த பராமரிப்புப் பணிகளால் ஏற்படும் சிரமத்திற்கு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் வருந்துகிறது.


பயணிகள் அனைவரும், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மொபைல் செயலி மற்றும் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளங்கள் மூலம் அவ்வப்போது தகவல்களைத் தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் உதவிக்கு, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உதவிமையத்தை 1860-425-1515 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது http://chennaimetrorail.org என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.


பாதுகாப்பான மற்றும் திறமையான மெட்ரோ இரயில் சேவையை உறுதிப்படுத்த, அனைத்துப் பயணிகளும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திற்கு தங்களின் ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்