சென்னை: பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்களில்தான் கொஞ்சம் கூட விவஸ்தையே இல்லாமல் பலரும் எச்சில் துப்புவார்கள்.. இப்போது இப்படிப்பட்டவர்களால் சென்னை மெய்ரோ ரயில் நிலையங்களும் அசுத்தமடைய ஆரம்பித்துள்ளன.
குறிப்பாக பான் பராக் போட்டுக் கொண்டு ரயில் நிலையங்கள் உள்ளிட்டவற்றில் எச்சில் துப்பி அந்த இடத்தையே ரணகளமாக்கி வைத்திருப்பார்கள். இடம் பொருள் ஏவல் என்று பார்க்காமல் கிடைக்கும் இடத்தில் எல்லாம் துப்புவது சிலருக்கு பொழுது போக்காகி விட்டது. பஸ்ஸை விட்டு இறங்கி விட்டால் போதும்.. உடனே நின்ற இடத்திலேயே துப்புவது சிலருக்கு ஹாபியாக உள்ளது.
பஸ் நிலையங்களின் சுவர்கள், பஸ் ஸ்டாப் சுவர்கள்,. பிளாட்பாரங்கள், கழிப்பறைகள் என எங்கு பார்த்தாலும்
இப்படிப்பட்ட அசுத்தங்களை அதிக அளவில் காணலாம். இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களிலும் இப்படிப்பட்டவர்கள் அசுத்தப்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

மெட்ரோ ரயில் நிலையங்கள் மிகவும் பாதுகாப்பானவை. அனைத்து இடங்களும் சிசிடிவி கண்காணிப்பில் உள்ளவை. இதனால் பயணிகள் குறிப்பாக பெண்கள் எந்தப் பயமும் இல்லாமல் இங்கு வந்து செல்கிறார்கள். இந்தியாவிலேயே மிகவும் பாதுகாப்பான, சுத்தமான, வசதியான மெட்ரோ நிலையமாக சென்னைதான் உள்ளது.
இந்த நிலையில் சமீப காலமாக சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் எச்சில் துப்பி பலர் அசுத்தப்படுத்தி வருகின்றனர். இப்படிப்பட்டவர்களுக்கு மெட்ரோ நிர்வாகம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுபோல எச்சில் துப்பவது குற்றச் செயலாகும், தண்டனை கொடுக்கப்படும். ரயில் நிலையங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவுங்கள் என்று அது கூறியுள்ளது.
"புளிச்" என துப்பும் முன்பு ஒரு முறை சிந்தித்துப் பார்த்தால் மெட்ரோ ரயில் நிலையங்கள் "பளிச்" என இருக்கும்... துப்புவோரே.. சிந்தியுங்கள்!
தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அலர்ட்!
பசி,பட்டினியை போக்கவில்லை... தீபம் ஏற்ற வேண்டும் என கூறுகிறார்கள்: சீமான் ஆவேசம்!
வானுயர் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
மெஸ்ஸியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஆவேசம்... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி!
திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்கள்: அன்புமணி ராமதாஸ் வேதனை!
ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!
Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!
சினிமாத் துறையினரை தொடர்ந்து பாதிக்கும் மன அழுத்தம்.. உரிய கவுன்சிலிங் அவசியம்!
Amma's Pride ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் சென்னையில் உருவான குறும்படம்!
{{comments.comment}}