சென்னை: வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக் கடலோர மற்றும் டெல்டா மாவட்ட பகுதிகளை நோக்கி நகர்ந்து வருவதால் சென்னையில் நகர்ப் பகுதியிலும், புறநகர்களிலும் சுமார் ஒரு மணி நேரமாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
தென் கிழக்கு வங்க கடல் பகுதிகளில் நிலை கொண்டு வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னைக்கு 27ஆம் தேதி கன மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று அதிகாலை முதலிலேயே சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தாம்பரம், சேலையூர், குரோம்பேட்டை, பல்லாவரம், பெருங்களத்தூர், முடிச்சூர், பாரிமுனை, எம்ஜிஆர் நகர், மந்த வெளி, பட்டினப்பாக்கம், மீனம்பாக்கம், எழும்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

திடீரென பெய்த மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் சூழ்ந்து போக்குவரத்திற்கு ஆங்காங்கே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அலுவலகம் செல்பவர்கள், ஸ்கூலுக்கு செல்பவர்கள் என பலரும் பாதிக்கப்பட்டனர். மேலும் காலை முதல் சென்னையில் கடுமையான பனிமூட்டம் காணப்படுவதுடன் மழையும் பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் சாலையில் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி செல்கின்றனர்.
இருந்தாலும் காற்று, இடி, மின்னல் இல்லாமல் வெறும் மழை மட்டுமே பெய்து வருகிறது. பெரு மழை காரணமாக நகரின் தாழ்வான பகுதிகள் அனைத்திலும் மழை நீர் தேங்கியுள்ளது. சாலைகளிலும் பல இடங்களில் நீர் தேங்கியுள்ளது. மழை நின்றதும் இது வடியத் தொடங்கும் என்பதால் மக்கள் கவனமுடன் செல்ல வேண்டியது அவசியம்.
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது. தற்போது இந்த காற்றழுத்து தாழ்வு மண்டலம் சென்னைக்கு தெற்கு தென்கிழக்கு 830 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களை நோக்கி நகர்ந்து வருவதால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேலும் படிப்படியாக மழையின் தீவிரம் அதிகரிக்க கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயத்தில் சென்னை கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டு வருகிறது.
சென்னை உட்பட வடக் கடலோர மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார் என்பது நினைவிருக்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் 2025.. டெபாசிட்டை இழக்கும் எதிர்க்கட்சிகள்!
இயக்குநர் லோகேஷ் கனகராஜின் நடிப்புக்கு என்ன சம்பளம் தெரியுமா.. அம்மாடியோவ்!
குழந்தைகள் தினம்.. நல்ல நல்ல பிள்ளைகளை உருவாக்கும் பெற்றோர்களுக்கும் முக்கியமான நாள்!
கூரைவீடும் வாழ்க்கையும்!
மணக்கும் மலர்கள்.. மயக்கும் மழலைகள்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 14, 2025... இன்று நல்ல காலம் பிறக்கிறது
பீகார் சட்டசபைத் தேர்தல் முடிவுகள்.. வேகமாக முன்னேறும் தேஜகூ.. போராடும் ஆர்ஜேடி.. தடுமாறும் காங்.!
மேகதாது வழக்கு: தமிழக உரிமையை மீட்க திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி
திருச்சி தந்த அதிர்ச்சி!
{{comments.comment}}