அள்ளித் தரப் போகுது வானம்.. குடையும் கையுமா என்ஜாய் பண்ணுவோம்.. பிரதீப் ஜான் குட் நியூஸ்!

Nov 21, 2023,06:55 PM IST
சென்னை: தமிழ்நாட்டுக்கு இந்த நவம்பர் மாதத்தின் மீதமுள்ல நாட்களில் நிறைய மழை கிடைக்கப் போகிறது. அக்டோபரை விட இப்போது கூடுதலாகவே மழை பெய்து வருகிறது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் வட கிழக்குப் பருவ மழை சூப்பராக பெய்து வருகிறது. விட்டு விட்டு பார்ட் பார்ட்டாக ஒவ்வொரு பகுதியா மழை பெய்து வருகிறது. ஆரம்பத்தில் சற்று நிதானமாக இருந்த மழை இப்போது ஷிப்ட் போட்டு தமிழ்நாட்டை அங்குலம் அங்குலமாக நனைத்துக் கொண்டுள்ளது.

இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், நவம்பர் மாதத்தின் மீதமுள்ள நாட்களில் தமிழ்நாட்டுக்கு நிறைய மழை கிடைக்க வாய்ப்பிருப்பதாக நல்ல செய்தி சொல்லியுள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியின்போது கூறுகையில்,  தமிழ்நாட்டுக்கு வரும் நாட்களில் நிறைய மழை காத்திருக்கிறது. அக்டோபர் மாதம் குறைவான மழையே நமக்குக் கிடைத்தது. அந்தக் குறையா இப்போது பெய்து வரும் உபரி மழை சரி செய்து விடும். அட்டகாசான கம்பேக்கைக் கொடுத்துள்ளது வட கிழக்குப் பருவ மழை.



தென் தமிழ்நாட்டில் உள்ள அணைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன. நவம்பர் கடைசி அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் ஒரு சுழற்சி ஏற்பட வாய்பபுள்ளது.  அது எந்தப் பக்கம் போகும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

தற்போது வட தமிழகத்தை நோக்கித்தான் நேற்று மழை பெய்தது. இதைத் தீவிரம் என்று சொல்ல முடியாது. பரவலான மழை கிடைத்தால்தான் அதை தீவிரம் என்று சொல்லலாம்.  தற்போது மேலடுக்கு சுழற்சி காரணமாக வட மாவட்டங்களில் மழை கிடைத்துள்ளது. இது வருகின்ற நாட்களில் வலுவிழந்து, அதாவது 23, 24 ஆகிய தேதிகளில், அரபிக் கடலில் பக்கம் இது போவது போல தெரிகிறது. அப்படிப் போகும்போது, உள் மாவட்டங்களில் அதாவது, மதுரை, கரூர் நாமக்கல், சேலம், விருதுநகர் போன்ற மாவட்டங்களில் மழை பெய்யும். சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யும். இரவு நேரத்தில் காலை வரை நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் அடுத்த 4 நாட்களுக்கு தொடர்ந்து இப்படி மழை பெய்ய வாய்ப்புள்ளது. அரபிக் கடல் பக்கம் சுழற்சி போனாலும் கூட கிழக்கிலிருந்து காற்றை இழுக்கும் என்பதால் சென்னையில் மழை தொடரும். நேற்றும், இன்றும் கடலோரப் பகுதிகளில்தான் நல்ல மழை பெய்துள்ளது. உட்புற சென்னையில் அவ்வளவு மழை இல்லை. வருகிற நாட்களில் உட்புற சென்னையிலும் நல்ல மழை பெய்யும் என்றார் பிரதீப் ஜான்.

சமீபத்திய செய்திகள்

news

துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினரின் பெரிய வேன் முன் செல்ல.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 3)

news

விஜய்யின் திடீர் திருச்செந்தூர் விசிட்...யாருப்பா அந்த ஜோசியர்?

news

meenakshi thirukalyanam 2026 மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் 2026 கோலாகலம்

news

தமிழகச் சட்டசபை தேர்தல் 2026: மே 4 வாக்கு எண்ணிக்கை - வழிமுறைகளை வெளியிட்ட தேர்தல் கமிஷன்

news

புதுச்சேரியில் இருந்து இனி 90 மி.லி., மது கொண்டு வந்தாலும் கைது

news

தமிழகத்தில் சுட்டெரிக்கும் கோடை வெயில்: சுகாதாரத்துறை சிறப்பு ஏற்பாடு

news

புதுச்சேரி பாடத்திட்டத்தில் பிரெஞ்சு மொழி நீக்கம்: திமுக சார்பில் போராட்டம் அறிவிப்பு

news

இதயம் என்னும் கவிதை...!

news

குடவோலை முறை.. உலகத்துக்கே வழிகாட்டிய உத்திரமேரூர் தேர்தல் நடைமுறை!

அதிகம் பார்க்கும் செய்திகள்