எங்களுக்காக ஒரு நல்ல ரோடு கூட போட்டுத் தர முடியாதா?.. வாட்ஸ் ஆப்பில் ஒரு சிட்டிசனின் குமுறல்!

Oct 30, 2023,10:18 AM IST

சென்னை: தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும், குறிப்பாக பெரிய பெரிய நகரங்களில் கூட சாலைகள் சரியாக இல்லை என்ற பொதுவான குற்றச்சாட்டு வலுத்து வருகிறது. இது சாதாரண ஊர் முதல் சென்னை வரை ஒரே மாதிரியான புகாராக இருப்பதை அரசு கண்டு கொள்கிறதா என்று தெரியவில்லை.


சென்னையில் மெட்ரோ பணிகள் நடைபெறும் பகுதிகளில் மாதக் கணக்கில் சாலைகள் மோசமாக உள்ளன. கஷ்டப்பட்டுத்தான் மக்கள் செல்கிறார்கள். சரி, மெட்ரோ பணிகள் நடக்கும் இடம்.. கொஞ்சம் முன்ன பின்னத்தான் இருக்கும் என்று விட்டு விடலாம்.. ஆனால் மெட்ரோ பணிகளே நடக்காத புறநகர்ப் பகுதிகள் பலவற்றில் சாலைகளைத் தேட வேண்டியதாகவுள்ளது. படு மோசமாக குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் மக்கள் பெரும் வேதனையுடன் பயணிப்பது தினசரி நாம் காணும் காட்சியாக இருக்கிறது.




இதுகுறித்து வாட்ஸ் ஆப் குழு ஒன்றில் ஒருவர் புலம்பித் தள்ளியுள்ளார். அவரது குமுறலைப் பாருங்க.


இடம்: சென்னை அஸ்தினாபுரம், திருமலை நகர். (தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்டது)


திருமலைநகரில் பல இடங்களில் சாலைகளில் ‛மில்லிங்’ செய்துள்ளனர்.  இதனால், பல இடங்களில் குழந்தைகளை அழைத்து செல்லும் பெற்றோர் அடிக்கடி வண்டியில் இருந்து கீழே விழுவதை பார்க்க முடிகிறது.  வாகனங்களுக்கு கிரிப் கிடைக்காமல் தடுமாறி கீழே விழும் சூழல் நிலவுகிறது.  அதுபோல, அஸ்தினாபுரம் சுடுகாடு தொடங்கி கொஞ்ச துாரத்துக்கு சாலையே கரடு முரடாக உள்ளது.  சாலை அமைத்தவர்கள், அங்கு மட்டும் பழைய படியே விட்டுச் சென்றது ஏனோ?  


ஆர்பி ரோட்டை இதற்கு மேல் கேவலப்படுத்த முடியுமா என தெரியவில்லை.  கண்ட கண்ட இடங்களில் குழி வெட்டுகிறார்கள், பின் சாலை மட்டத்தை விட உயரமாக சிமென்ட் பேக் செய்கிறார்கள், அல்லது சாலை மட்டத்தை விட பள்ளமாக விட்டுவிடுகிறார்கள்.  சில இடங்களில் ரப்பீஸ் போடுகிறார்கள், ஜல்லி கொட்டுகிறார்கள்.  சாலைக்கு தேவையான நடவடிக்கையை எடுக்காமல், மோசமான சாலையுடன் சமரசம் செய்து கொள்ளும்படி மக்களை பணிக்கிறார்கள்.  


எம்ஐடி பாலத்திலும் இதே நிலைதான்.  எக்கச்சக்க மேடுகள் காணப்படுகின்றன, பில்லர்களை இணைக்கும் பகுதிகளில் இந்த அத்துமீறல்கள் நடந்துள்ளன.  பேட்ச் வேலை செய்பவர்கள் சாலை மட்டத்துக்கு சமமாக பேட்ச் வேலைகளை செய்யலாமே.   பொதுவாக, எம்ஐடி பாலம் முழுவதும் இப்படி மேடு பள்ளங்களால் நிறைத்து, ஆர்பி சாலை வழியாக, நன்மங்கலம் வரை கரடு முரடான சாலைகளில் மக்கள் பயணிக்க வேண்டியுள்ளது.  இதன் சீரியஸ் நெஸ் இவர்களுக்கு தெரியுமா, தெரியாதா?   


இந்த  விவகாரத்தை சம்பந்தப்பட்ட நிர்வாகத்துக்கு தெரிவிக்க  இந்த குருப்பில் உள்ள எவரேனும் முன்வந்தால் நன்றாக இருக்கும்.  செம்பாக்கம்-அஸ்தினாபுரம் இணைப்பு சாலையில் பயணிப்பதே ஒரு மாதிரியான அனுபவத்தை தரும்.  சுமார் இரண்டு கிலோ மீட்டர் உள்ள இந்த சாலையில், டூ விலரில் சென்றாலும் சரி, காரில் சென்றாலும் சரி, ‛டொம்...... டொம்’ என சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும்.  அந்த அளவிற்கு  சாலையை ‛பினிஷிங்’ செய்திருப்பார்கள். இத்தனைக்கும் இது காங்கிரிட் சாலை. 


இப்படி ஆபத்தான முறையில் பயணிப்பதன் மூலம், முதுகு நடுத்தண்டு, தோள்பட்டைகள் மிக கடுமையாக பாதிக்கப்படும். இவையெல்லாம் ஏன் கண்டுகொள்ளாமலேயே விடப்படுகின்றன என தெரியவில்லை.


மக்களுக்கு நிறையப் பிரச்சினைகள் உள்ளன.. இதுகுறித்து மக்கள் பிரதிநிதிகள் கவனம் செலுத்த வேண்டும். தேர்தலுக்கு மட்டும் வந்தால் போதாது.. மக்களுக்குத் தேவைப்படுபவற்றை செய்து தருவதற்காகத்தான் அவர்களுக்கு வாக்களித்துள்ளனர் மக்கள்.. அதைப் புரிந்து கொண்டு மக்கள் பிரதிநிதிகள் செயல்படுவதுதான் நல்லது. எல்லா வேலைக்கும் முதல்வர் வந்த பார்க்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது.. அவரது பிரதிநிதிகள்தான் எம்எல்ஏக்களும், கவுன்சிலர்களும்.. அவர்கள்தான் இதையெல்லாம் தினசரி பார்த்து ஆவண செய்ய வேண்டும்.


இது ஒரு பகுதியின் புலம்பல் கிடையாது.. ஒட்டு மொத்த மாநிலத்திலும் பல இடங்களில் இதுபோன்ற குமுறல்கள் உள்ளன. தலைநகருக்குப் பக்கத்தில் இருக்கும் பகுதியிலேயே இவ்வளவு மோசமான நிலை என்றால் பிற பகுதிகளின் நிலையை நினைத்துப் பார்க்க முடியவில்லை.

சமீபத்திய செய்திகள்

news

Cauvery River water Issue: காவிரி நீர் பிரச்சனை எப்போது துவங்கியது? .. இதற்கு என்ன தான் தீர்வு?

news

முதல்வர் விஜய் கர்நாடகா வர வேண்டாம் : கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்

news

டாஸ்மாக் ஊழல் வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன்...கைது செய்யவும் தடை

news

மின்சார கட்டணம் உயர்வு உண்மையா? - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

news

வருமான வரி தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்...தவறவிட்டால் அபராதம்

news

காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து 6 நாட்கள் விலக்கு கோரி செந்தில் பாலாஜி மனு

news

2027 ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட்: 3 நாடுகளின் 12 மைதானங்களில் போட்டிகள் நடைபெறும்

news

ஜெர்மனியில் கடும் வெப்ப அலை: பலியானோர் எண்ணிக்கை 10,000 ஆக உயர்வு!

news

மேகதாது அணை விவகாரம்: தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை!

அதிகம் பார்க்கும் செய்திகள்